India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெட்டிக்கடைகள், மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் எலிவிஷம், கரப்பான் கொல்லிகள், கொசுவிரட்டிகள் போன்ற வீட்டில் பயன்படுத்தும் பூச்சிகொல்லிகளை விற்பனை செய்ய உரிமம் பெறுவது அவசியம். உரிமம் இல்லாமல் விற்பனை செய்வது பூச்சிக்கொல்லி சட்டம் 1968 இன் படி குற்றமாகும். உரிமம் பெற வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தனிநபர் மற்றும் குழுக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் ரூ.15 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://tabcedco.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர் மு. அருணா, இவர் 2016-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பேட்ச்சைச் சேர்ந்தவர் ஆவார். இவர் வேளாண்மை அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். மு. அருணா நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவராக கடந்த 13.09.2023 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்பதற்கு முன்பு சென்னையில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார்.

தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை சார்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருமயம் அரசு கலைக் கல்லூரி கட்டிடத்தினை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றினார். உடன் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, புதுகை எம்.எல்.ஏ வை.முத்துராஜா, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த மெர்சி ரம்யா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த வருடம் மே மாதம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். தற்போது புதுக்கோட்டை புதிய மாவட்ட ஆட்சியராக நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அருணா புதுக்கோட்டை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை,வேலை வாய்ப்பு,பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாசில்தாரர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கும் 21 பேரை பணியிட மாற்றம் செய்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா இன்று உத்தரவிட்டடார். நிர்வாக காரணங்களுக்காக வருவாய்த்துறையில் 21 தாசில்தாரர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக வருவாய்த்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூலை 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணியளவில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.