Pudukkottai

News July 20, 2024

பொற்பனைகோட்டையில் செம்பு ஆணிகள் கண்டெடுப்பு

image

பொற்பனைக்கோட்டையில் நடந்து வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தற்போது செம்பு ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இங்கு இரும்பிலான ஆணிகளே கிடைந்த நிலையில் இன்று 5 செம்பு ஆணிகள் கிடைத்துள்ளது. மேலும், செம்பில் வார்க்கப்பட்ட அஞ்சனக்கோலும் கிடைத்திருப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News July 20, 2024

புதிய மாவட்ட ஆட்சியரை சந்தித்த மேயர்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த மு.அருணா சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக நியமணம் செய்யப்பட்டார். இவர் நேற்று  புதுக்கோட்டை மாவட்டத்தின் 43ஆவது  ஆட்சித் தலைவராக நேற்று பொறுப்பேற்றார். இந்நிலையில் அவரை இன்று(ஜூலை 20) மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் துணை மேயர் மு. லியாகத் அலி ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.

News July 20, 2024

மாநகராட்சியாக தரம் உயரும் புதுக்கோட்டை

image

கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட சட்டசபை கூட்டத் தொடரில் புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரன் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 14 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த 14 சட்ட மசோதாக்களுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சிய இனிமேல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.

News July 20, 2024

திருடுபோன 171 செல்போன்கள் ஒப்படைப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுப்போன, தொலைந்து போன செல்போன்கள் தொடர்பாக சைபட் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் கடந்த 2 மாதங்களில் காணாமல் போன ரூ.25,65,000 மதிப்புள்ள 171 செல்போன்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் நேற்று போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே ஒப்படைத்தார். கடந்த ஆண்டு 283 செல்போன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News July 19, 2024

புதுக்கோட்டை அருகே எம்எல்ஏ அறிவுறுத்தல்

image

புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மால் சத்திரத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பாக புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் தரம் குறித்து இன்று புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா ஆய்வு மேற்கொண்டார். அரசு குறிப்பிட்டுள்ள காலக்கெடுக்குள் கட்டிடப் பணிகளை முடிக்கவும், கட்டிடத்தின் தரம் மற்றும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை.23, ஆகஸ்ட்.4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 19, 2024

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரி மனு

image

வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்திவந்த மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடுமையான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியெடுத்தது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.இதில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசார் அவகாசம் கோரிய நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

News July 18, 2024

புதுக்கோட்டை: மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

ஆட்சியர் மெர்சி ரம்யாவிற்கு புதுகை எம்எல்ஏ வாழ்த்து

image

கடந்த ஓராண்டு காலமாக புதுக்கோட்டையின் மாவட்ட ஆட்சித் தலைவராக செயல்பட்டு, தற்போது புதுக்கோட்டையிலிருந்து விடைபெற்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனராக பணி மாறுதலில் செல்லும் ஐ.சா.மெர்சி ரம்யாவை மரியாதை நிமித்தமாக இன்று (ஜூலை.18) புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

News July 18, 2024

விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு நிவாரணம்

image

தஞ்சை அருகே சமயபுரத்திற்கு பாதயாத்திரை சென்ற பக்தர்களின் மீது வாகனம் மோதிய விபத்தில், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சத்தை நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கண்ணுகுடிப்பட்டி பகுதியை சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் இன்று வழங்கினர்.

error: Content is protected !!