India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (22.07.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு. அருணா பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

நூற்றாண்டுப் பழமையான யோசனையாகக்  கருதப்படும் புதுக்கோட்டை- தஞ்சையை இணைக்கும் புதிய ரயில் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என ரயில் பயணிகள் ஆவலுடன் எதிா்பாா்க்கின்றனா்.
திருச்சி- புதுக்கோட்டை ரயில் தடம் கடந்த 1927ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே தஞ்சை புதுக்கோட்டையை இணைக்கும் ரயில் தடம் அமைப்பதுதான்  திட்டமாக இருந்திருக்கிறது. 

புதுக்கோட்டை திலகர் திடலில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆணைக்கிணங்க ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திமுக அரசு நிர்வாகத்தின் தோல்விகளை மறைக்க மின்கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சொத்து வரி உயர்வு போன்ற கட்டணங்களை உயர்த்தி மக்கள் மீது சுமைகளை திணிப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று(ஜூலை 22) காலை 10 மணி அளவில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை பாலா நகர் பகுதியில் ரூ.23.57 கோடி மதிப்பீடு கட்டப்பட்டுள்ள 256 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா மற்றும் மேயர் செந்தில் திலகவதி கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் உட்காட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது முத்துமாரியம்மன் கோயில். இக்கோயிலில் நேற்று(ஜூலை 21) கணபதி ஹோமம், லட்சுமி ஹோமத்துடன் தொடங்கிய குத்துவிளக்கு பூஜையில் பெண்கள் பலர் கலந்து கொண்டு 1,008 குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே பூவாசகுடி செந்தலை அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் குதிரை எடுப்பு விழா மற்றும் கிடா வெட்டு பூஜை நேற்று நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் விரதம் இருந்து கோயிலுக்கு மேளதாளம் முழங்க குதிரை சிலைகளை எடுத்து வந்தனர். பின்னர் கிடா வெட்டி பூஜை நடைபெற்றது. இரவு அய்யனார் பூரண புஷ்கலை, விநாயகர், பெரிய கருப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் நற்பவளக்குடி அருள்மிகு ஸ்ரீ மெய்யர் அய்யனார் திருக்கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கட்டுமான பணியினை சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கோவில் நிர்வாகத்துறையினருடன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

குளத்தூரை அடுத்த மாத்தூரைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (54). மாத்தூர் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்தாலும் தனது தொழிலான பிணம் எரிக்கும் தொழிலை விடாமல் செய்து வருகிறார். சாலையில் இறந்தவர்களையும் தனது சொந்த செலவில் அடக்கம் செய்கிறார். மேலும் மனிதர்கள் மட்டுமல்லாது, சாலையோரம் இறந்து கிடக்கும் நாய், ஆடு, மாடு போன்ற ஜீவராசிகளையும் தானே எடுத்துச் சென்று புதைத்து விடுவார் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

புதுக்கோட்டை 1974 ல் உருவாக்கப்பட்டு 51வது ஆண்டில் உள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து இதுவரை 42 மாவட்ட ஆட்சியர்கள் பணியில் இருந்துள்ளனர். தற்போது 43 ஆவது மாவட்ட ஆட்சியராக அருணா ஐஏஎஸ் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். கடந்த 5 ஆண்டுகளில் உமாமகேஸ்வரி, கவிதா ராமு, மெர்சி ரம்யா என 3 பெண் மாவட்ட ஆட்சியர்களே பணியாற்றி வந்த நிலையில் தற்போது தொடர்ந்து 4 வது பெண் மாவட்ட ஆட்சியராக அருணா ஐ.ஏ.எஸ் பதவி ஏற்றுள்ளார்.

பொற்பனைக்கோட்டையில் 26 நாட்களாக நடக்கும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் செம்பு ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை இங்கு இரும்பிலான ஆணிகளே கிடைந்த நிலையில் நேற்று 5 செம்பு ஆணிகள் கிடைத்துள்ளன. மேலும், செம்பில் வார்க்கப்பட்ட அஞ்சனக்கோலும் கிடைத்திருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது X தள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.