India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கந்தா்வகோட்டை ஒன்றியத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மோசமான நிலையில் உள்ள கழிப்பறைகளை விரைந்து சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ஆட்சியா் மு. அருணா நேற்று உத்தரவிட்டாா். தமிழக அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், பல்வேறு அலுவலகங்கள், அரசு நலத் திட்டங்கள், திட்டப் பணிகளின் முன்னேற்றம் உள்ளிட்டவை தொடா்பாக ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தலைமையில் நேற்று சிறப்பு குறைகள் கேட்பு முகாம் நடைபெற்றது. முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் அனைத்து உட்கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு மனு முகாமில், மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

புதுகை மீனவர்கள் 13 பேரை ஜூலை 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, கடந்த 11ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டன. நீதிபதி உத்தரவையடுத்து, தற்போது யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை அரசுப் பணிகளுக்கு நிலம் எடுத்ததற்கு இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய நீதிமன்றப் பணியாளா்கள் நேற்று மாலை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெருங்களூரில் ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்காக ஆதிதிராவிடா் நலத்துறையால் வேதம்பாள் ஆச்சி என்பவருக்குச் சொந்தமான 570 சென்ட் நிலம் அரசால் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்கப்பட்டதில், புதுக்கோட்டை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் முதன் முறையாக 2 பெண்களுக்கு கண்டக்டர் பணி வழங்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியை சேர்ந்த கவுரீஸ்வரி (28), காரைக்குடியை சேர்ந்த பனிமலர் (35) ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பெண் கண்டக்டர்களை அதிகாரிகள், சக ஓட்டுநர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 24-25ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு புதுக்கோட்டை மாவட்டத்தில் விரைவில் கூட்டப்படவுள்ளது , இந்த மாவட்டத்தில் உள்ள தனிநபர் / சங்கங்கள் / நிறுவனங்களில் தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகள் / குறைகள் குறித்து மனுக்களை வரும் 5ம் தேதிக்குள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சென்னை – 600 009, என்ற முகவரிக்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக் கழகத்தில், பணியின் போது இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை” புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை அருகே உள்ள ஈட்டி தெருவை சேர்ந்த நல்லமுத்து மகன் சண்முகம், சிங்கப்பூரில் கப்பலில் வேலை செய்து வருகிறார். ஐந்து தினங்களுக்கு முன்பு கப்பலில் தீப்பிடித்து சம்பவ இடத்தில் சண்முகம் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்து அங்கிருந்து சொந்த ஊரான மேட்டுப்பட்டிக்கு இன்று கொண்டுவரப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் நடைபெற்று வரும் 2ம் கட்ட அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மணியில் துளையிடத் தொடங்கி முழுமை அடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருப்பது காணப்படுகிறது. பொற்பனைக்கோட்டையில் மணிகள் செய்வதற்கான தொழிற்கூடம் இருந்ததற்கான சான்றாக விளங்குகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த (ஜூலை) மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு ஆட்சியர் அருணா தகவல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.