Pudukkottai

News July 29, 2024

குளத்தை காணவில்லை: மக்கள் பரபரப்பு மனு

image

கந்தர்வகோட்டை அடுத்த கீழக்கோட்டை கிராம ஊர்மக்கள் தங்களுடைய ஊரில் உள்ள 3 குளங்களை ஆக்கிரமிப்புகள் செய்ததை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணாவிடம் கீழக்கோட்டை கிராம மக்கள் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியரிடம் மனுவை வழங்கினர். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

News July 29, 2024

‘தமிழிசைக்கு ஆளுநர் பதவி கிடைக்காததில் வருத்தம்’

image

புதுக்கோட்டை, கொத்தமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் எம்.பி கூறியதாவது: 100 நாள் வேலைத் திட்டத்துக்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. மாணவர்களுக்கான கல்விக் கடனைத் தள்ளுபடி செய்யவில்லை. சாதாரண மக்களின் திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு குறைத்துக் கொண்டு வருகிறது. தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநர் பதவி வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது என்றார் அவர்.

News July 29, 2024

எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் முடக்குகிறது பாஜக: ப. சிதம்பரம்

image

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கொத்தமங்கலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சி உறுப்பினர்களை மக்களவையிலும், அதேபோல நிதி ஆயோக் கூட்டத்திலும் பாஜக அரசு பேச விடுவதில்லை. இது எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் செயலாகும். குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது நடந்த தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் 25 நிமிடம் பேசினார். அப்போது யாரும் குறுக்கிடவில்லை என்றார் அவர்.

News July 29, 2024

புதுக்கோட்டையின் முதல் பெண் நடத்துனர்

image

புதுக்கோட்டை மாவட்டம், குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன், அரசுப் பேருந்து நடத்துநர்.இவர், கடந்த 2008-ஆம் ஆண்டு பணியின்போது உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவரது மூத்த மகள் கவுரீஸ்வரி (28), பிகாம் பட்டதாரி. பணியின்போது, உடல் நலக்குறைவால் உயிரிழந்த தந்தையின் நடத்துநர் பணியைப் பெற்று, புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் பெண் நடத்துநர் என்ற பெருமையைப் கவுரீஸ்வரி பெற்றுள்ளார்.

News July 28, 2024

புதுக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் 11/07/2024 முதல் 10/09/2024 வரை நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் 30/07/2024 முள்ளு ஊராட்சி, அறந்தாங்கி ஊராட்சி, பொன்னமராவதி ஊராட்சிக்கு சிலட்டூர் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நாளை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தெரிவித்துள்ளார்.

News July 27, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 27, 2024

புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட வடக்கு தெற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசை கண்டித்து புதுக்கோட்டை திலகர் திடலில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கேகே செல்லபாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உறையாற்றினர். இதில் திமுக தொண்டர்கள் 300 பேர் கலந்து கொண்டனர்.

News July 27, 2024

புதுக்கோட்டை அருகே போஸ்டரால் பரபரப்பு

image

அன்னவாசல் அருகே அண்ணாபண்ணை துணை மின்நிலையத்தில் பணியாற்றிய 7 ஒயர் மேன்கள் மற்றும் 6 உதவியாளர்களை காணவில்லை என சமூகவலைதளத்தில் வெளியான போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அவர்களை கண்டுபிடித்து மீண்டும் பணியில் அமர்த்திட வேண்டியும் ஒற்றைகாலில் காத்திருப்பு போராட்டம் ஆக. 1ஆம் தேதி காலை 10-மணிக்கு அண்ணாபண்ணையில் நடைபெறும் என அந்த போஸ்டரில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News July 26, 2024

புதுக்கோட்டை யி‌ல் புத்தக திருவிழா பேர‌ணி

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 ஆவது புத்தக திருவிழா பேரணியை இன்று மாவட்ட ஆட்சியர் அருணா தொடங்கி வைத்தார். இதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களிடையே செல்போன் பயன்பாட்டை குறைத்து புத்தக வாசிப்பு திறனை அதிகரிக்க மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

News July 26, 2024

டீசலை குடித்த குழந்தை பலி

image

நாமக்கல் மாவட்டம் திருச்சங்கோடு பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் அன்னவாசல் பகுதியில் தங்கி வேலைபார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டின் தேவைக்காக டீசலை வாங்கி வைத்துள்ளனர். வீட்டில் இருந்த அவரது ஒரு வயது குழந்தை டீசலை குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து குழந்தையை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று பலியானது.

error: Content is protected !!