Pudukkottai

News August 8, 2024

புதுகையில் முதலமைச்சர் கோப்பை போட்டிகள்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் – 2024 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதற்கான முன்பதிவை https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 25-ஆம் தேதிக்குள் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள் அனைவரும் தவறாமல் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 8, 2024

புதுகை பஞ்சாயத் தலைவருக்கு டெல்லியில் விருது 

image

தலைநகர் டெல்லியில் இந்திய அரசியலமைப்பு சங்கம் (Constitution Club of India -New delhi )ல் நடைபெற்ற சிறந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான விருது வழங்கும் விழாவில்,
பஞ்சாயத் ராஜ் அமைச்சர் S.P. சிங் பாகேல் அவர்களிடம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்கான விருதை  ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர்பெற்றுக் கொண்டார்.

News August 8, 2024

புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டையில் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 8, 2024

நியாயவிலைக்கடை தொடர்பான குறைதீர் முகாம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும், ஆகஸ்ட் 2024-ஆம் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை வரும் 10-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை குடும்ப அட்டைகள், நியாய விலைக்கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் முகாம் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடைய தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர்கள், முன்னிலையில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 8, 2024

ஆலங்குடியில் அமைச்சர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்

image

ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் வேப்பங்குடி ஊராட்சி இம்மனாம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுடன் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா அப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர், மாணவிகள் உடன் இருந்தனர்.

News August 8, 2024

புதுகை கவிஞருக்கு வைரமுத்து புகழாரம்

image

புதுக்கோட்டை, குளத்தூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முரசொலியில் தொடர்ந்து கவிதைகளை எழுதி வரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிச்சுடர் கவிதை பித்தனுக்கு, கவிஞர் வைரமுத்து புகழாரம். சென்னையில் நேற்று நடைபெற்ற கலைஞரின் நூறு கவிதைகள் நூறு நூல் வெளியிட்டு விழாவில் நம்மிடம் ஒரே ஒரு கவிஞர் மட்டுமே மிச்சம் இருக்கிறார், அவரை கொண்டாட வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறினார்.

News August 8, 2024

புதுக்கோட்டையில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்

image

புதுக்கோட்டையில் நாளை திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் “மக்களுடன் முதல்வர்” திட்டம் நடைபெற உள்ளது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News August 8, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் 660.20மிமீ மழை பதிவு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் 660.20 மிமீ மழை பெய்ததாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதில் பெருங்களூரில் 76 மிமீ, ஆலங்குடியில் 38 மிமீ, திருமயத்தில் 65 மிமீ, நாகுடியில் 46 மிமீ, ஆவுடையார் கோவிலில் 42 மிமீ, புதுக்கோட்டையில் 40 மிமீ மழை பெய்துள்ளது. மேலும் சராசரியாக மாவட்ட முழுவதும் 27.51 மிமீ மழை பெய்துள்ளது.

News August 8, 2024

சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் இன்று பயண விபரம்

image

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 இடங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார். இதில் திருக்கட்டளை, மகனாம்பட்டி, திருவரங்குளம், கே.வி கோட்டை, அரசடிப்பட்டி, பாதம்பட்டி, அறையப்பட்டி ஆகிய பகுதிகளில் அங்கன்வாடி கட்டிடம், ஊராட்சி மன்ற கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா, ஒன்றிய அலுவலகம் கட்டும் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

News August 8, 2024

சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுலா தொழில் முனைவோர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா விருதுகளை பெறுவதற்கு வரும் 20ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் தகவல்களுக்கு 7397775682 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனை ஷேர் செய்யவும்.

error: Content is protected !!