India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 09, 10, 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். பொதுமக்கள் தாங்கள் வாக்களித்த வாக்குச்சாவடி மையங்களில் பங்கேற்கலாம் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகத்தில் முழுவதுமாக (ஒயிட் பெயிண்ட்)வெள்ளை நிறமாக காட்சியளிக்கும் வகையில் வெள்ளை நிற வண்ணம் முழுமையாக பூசும் பணி துவக்கி வைக்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் மாநகராட்சி அலுவலகம் முழுவதும் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சி போன்று வெள்ளை நிற பூச்சு அடிக்கப்படுகிறது.
புதுகை மாவட்டத்தில் நேற்று 198.40 மி.மீ., மழை பெய்ததாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. புதுகை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஆங்காங்கே பலத்த மழை பெய்தது. அதிக அளவாக குடுமியான்மலையில் 56 மி.மீ குறைந்த அளவாக ஆதனக்கோட்டையில் 1 மி.மீ மழை பெய்துள்ளது.
ஆலங்குடி அருகே கீழ கரும்பிரான் கோட்டையை சேர்ந்த ஆசிரியர் சக்திவேல் (40). ஆலங்குடி அரசு பள்ளியில் வரலாற்று ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அப்பள்ளியில் பிளஸ் டூ மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், புதுகை CEO சண்முகம் ஆசிரியர் சக்திவேலை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாவட்டத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் புதுக்கோட்டை, திருமயம் ,விராலிமலை, பொன்னமராவதி, பகுதியில் புவனேஸ்வரி, விக்னேஷ் ,கணேஷ், மூர்த்தி ,உள்ளிட்ட ஒன்பது பேர் காயம் அடைந்து மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தந்த பகுதி காவல்துறையில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரங்கத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடுத்தர தொழிலாளருக்கான மானியத்துடன் கூடிய தொழில் கடன் முகாமில் மாவட்ட ஆட்சியர் அருணா, மாவட்ட தொழில் கடன் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
நார்த்தாமலை அருகே உள்ள பசுமலைபட்டி பேருந்து நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி பேருந்து மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த கீரனூர் போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு டீன்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி முதல்வராக கலைவாணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். கலைவாணி சென்னை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். முன்னதாக புதுகை மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த மணி மாற்றப்பட்டுள்ளார்.
மன்னர் ஆண்ட புதுகை சமஸ்தானத்தில் நடைபெறும் உள்ளூர் தேர்தலில் கீழ்கண்ட தகுதிகள் கட்டாயமாக்கப்பட்டன. அதன்படி, ஒரு தொகுதியில் 100 நாள் வசித்திருக்க வேண்டும், ரூ.10 நிலவரி செலுத்தும் நில சொந்தக்காரர், ஆண்டிற்கு ரூ.3 சொத்து வரி தொழில் வரி செலுத்துபவர், ஆண்டிற்கு 350 ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்கள், பட்டதாரிகள், மாதம் ரூ. 25 ஓய்வூதியம் பெறுபவர்கள். இவற்றில் ஏதேனும் ஒரு தகுதி இருத்தல் வேண்டும்.
அரிமளம், திருமயம், நமணசமுத்திரம் பகுதிகளில் 11 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதில் ஹரிகரன் (44), வெங்கடேஷ் (26), பாலகுமாரன் (58), சொக்கலிங்க (54), தங்கபாண்டியன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் 100 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளி, 4 இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. குற்றவாளிகளை விரைவாக கைது செய்தமைக்காக எஸ்.பி பாராட்டினர்.
Sorry, no posts matched your criteria.