Pudukkottai

News July 10, 2025

புதுகை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News July 10, 2025

புதுக்கோட்டை : VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை விஏஓ-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், புதுகை மாவட்ட மக்கள் 04322-222355 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க

News July 10, 2025

கணவர் மடியில் உயிரிழந்த மனைவி

image

புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமநாதன் தெய்வானை தம்பதியினர் குற்றாலத்திற்கு சென்றுள்ளனர். அங்கு குளித்து விட்டு நடந்து செல்லும் பாதையில் அமர்ந்திருந்த பொழுது உடற்சோர்வு காரணமாக கணவர் மடியில் தெய்வானை சாய்ந்துள்ளார். இந்நிலையில் திடீரென கணவர் மடியிலேயே தெய்வானை உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News July 10, 2025

சமூக நல்லிணக்க விருது; ஆட்சியர் அறிவிப்பு

image

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்கப்படுத்தவும் கௌரவ படுத்துவதற்கும் சமூக நல்லிணக்க விருதுடன் ரூ.1 கோடி வழங்க தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த விருதை பெற தகுதியான புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா இன்று மாலை அறிவிப்புத்துள்ளார்.

News July 9, 2025

புதுக்கோட்டை: ரேஷன் குறைதீர்க்கும் முகாம்

image

புதுகை மாவட்டம் முழுவதும் ஜூலை12ஆம் தேதி அந்தந்த பகுதி தாலுகா அலுவலகங்களில் ரேஷன் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், செல்போன் எண் பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனு அளிக்கலாம். மேலும் நியாய விலை கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் புகார் அளிக்கலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News July 9, 2025

புதுகை: 10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை 1/2

image

அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே https://ssc.gov.in/home/apply என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். (<<17003132>>பாகம்-2<<>>). SHARE பண்ணுங்க.

News July 9, 2025

புதுகை: 10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை 2/2

image

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு திருச்சியில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
▶️உரிய ஆவணங்களுடன் https://ssc.gov.in/home/apply எனும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். SHARE IT.

News July 9, 2025

புதுக்கோட்டை: ஐடிஐ, டிப்ளமோ போதும்.. அரசு வேலை..!

image

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இதற்கு BE / ஐடிஐ / டிப்ளமோ முடித்தவர்கள் வரும் ஜூலை.12-க்குள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு புதுக்கோட்டையில் வரும் ஜூலை.31 அன்று நடைபெற உள்ளது. இந்த தகவலை உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News July 9, 2025

புதுக்கோட்டையில் வினோத வழிபாடு உள்ள கோயில்

image

புதுக்கோட்டை அடுத்த செல்லுகுடி கிராமத்தில் வீரலட்சுமி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவின் போது பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. மேலும் பிள்ளி, சூனியம் உள்ளிட்டவை விலக பூசாரியிடம் சாட்டை அடி வாங்கும் வினோத வழிபாடும் நடைபெறும். தேங்காய் தலையில் உடைத்தும், சாட்டை அடியின் போதும் இதுவரை காயம் ஏற்பட்டதில்லை எனக் கூறப்படுகிறது. SHARE பண்ணுங்க.

News July 8, 2025

புதுகை மக்களே.. இதை தெரிந்து கொள்ளுங்கள்

image

▶மாநில கட்டுப்பாட்டு அறை-1070,
▶மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077,
▶மாவட்ட ஆட்சியர் அலுவலகம்-04322 – 221624,
▶காவல் கட்டுப்பாட்டு அறை-100,
▶விபத்து உதவி எண்-108,
▶தீ தடுப்பு, பாதுகாப்பு-101,
▶குழந்தைகள் பாதுகாப்பு- 1098,
▶பேரிடர் கால உதவி- 1077. இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!