Pudukkottai

News October 7, 2024

ரூ.30 லட்சம் மதிப்பிலான வீட்டை தானமாக வழங்கிய பெண்

image

புதுக்கோட்டை வயலோகம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவிலுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான வீட்டை அறநிலைத்துறையிடம் தானமாக வழங்கிய பெண்மணிக்கு அறநிலையத்துறையின் அதிகாரி முத்துராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். வீட்டை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேளாங்கண்ணி என்ற பெண் கோரிக்கை வைத்தார். கிராம மக்கள் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.

News October 7, 2024

புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9965860996, 9443764621, 9791731249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

News October 7, 2024

ஆட்சியர் தலைமையில் குறைதீர் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருணா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் துவங்கியது. மாவட்டத்திலுள்ள 13 ஒன்றியங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கி வருகின்றனர். இந்நிகழ்வில் அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

News October 7, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மின்தடை

image

புதுக்கோட்டை, குளத்தூர், மாத்தூர், மேலத்தானியம், நகரப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (அக்.8) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி, கம்பன் நகர், பெரியார் நகர், மறைமலை, திருவரங்குளம், சத்தியமங்கலம், நார்த்தாமலை, புதுப்பட்டி, அரசமலை, நல்லூர் உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 7, 2024

அன்னவாசல் அருகே விபத்து – 9 பேர் படுகாயம்

image

அன்னவாசலை சேர்ந்தவர் சேக்சையது இவர் ஒரு ஆட்டோவில் நேற்று முகமதுஉசேன்,
ஆமீனா பானு, ஜாஸ்மீன் ஆகியோருடன் புதுக்கோட்டை சென்றபோது  பின்னால் புதுக்கோட்டையை சேர்ந்த குணசேகரன் என்பவர் ஓட்டி வந்த  கார் ஆட்டோ மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் காரில் இருந்த சித்ரா, சரவணன்,  சந்திரா, நடராஜன் மற்றும் ஆட்டோவில் சென்றவர்கள் உள்ளிட்ட 9 படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தினர்.

News October 7, 2024

அதிமுக ஆட்சி வந்தால் ரூ.2,000

image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கயத்தாறு ஒன்றியசெயல் வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2000 உரிமைத் தொகை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களால் ஆட்சியை பிடிக்க முடியாது” என அவர் தெரிவித்தார்.

News October 6, 2024

மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி

image

அன்னவாசல், சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது ராப்பூசல் கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பர் வீட்டு ஆட்டுக்கொட்டைகளில் கட்டியிருந்த 7 செம்மரி ஆடுகள் இடி மின்னல் தாக்கியதில் உயிரிழந்தது. பின்னர் தகவல் அறிந்து அங்கு சென்ற மருத்துவர் நதியா இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் ஆடுகள் குழியில் புதைக்கப்பட்டது.

News October 6, 2024

கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு தள்ளுபடி

image

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் முக்கனி கோ ஆப் டெக்ஸ் அரசுத்துறை நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை நவம்பர் இறுதியில் வருவதால் தள்ளுபடி விற்பனை டிசம்பர் மாதம் கடைசி வரை நடைபெறும் எனவும் மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கோ – ஆப்டெக்ஸ் மேலாளர் பாண்டியன் தெரிவித்தார்.

News October 6, 2024

திருமயத்தில் 95.00 மி.மீட்டர் மழை பதிவு

image

புதுகை மாவட்டத்தில் கடந்த 24 மணி (இன்று காலை 6:30 நிலவரப்படி) நேரத்தில் 774.5 மில்லிமீட்டர் மழை பெய்ததாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருமயத்தில் மிக அதிகளவாக 95.00 மில்லி மீட்டர் மழையும், மிகக் குறைந்த அளவாக பொன்னமராவதியில் 1.20 மில்லி மீட்டர் மழை பெய்ததாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

News October 6, 2024

புதுக்கோட்டை என்ற பெயர் எப்போது வந்தது! “காலச்சுவடு”

image

கலசமங்கலம் – சிங்கங்கலம் என்ற பெயருடன் விளங்கிய புதுகை நகரப் பகுதி 1680-1730இல் புதுகை சீமையை ஆண்ட ரகுநாதராய தொண்டமான் புதிய கோட்டை கொத்தளங்களை கட்டினார். அது முதல் புதுகை என பெயர் பெற்றது. இக்கோட்டை தற்போதைய அடப்பன்குளத்தில் வடக்கு பகுதியில் அமைந்திருந்தது. தஞ்சை மராட்டியர் படை எடுப்பால் அழிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. 1700இல் புதுகை என பெயர் வழங்கியதற்கு ஆதாரம் உள்ளன. “காலச்சுவடு”