Pudukkottai

News October 15, 2024

புதுக்கோட்டை மின்சார வாரியம் அறிவிப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், புதுகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் வீட்டு கால்நடைகளை மின்சார கம்பிகளில் கட்டக்கூடாது என்றும், ஏதேனும் மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் உடனடியாக அருகில் உள்ள மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். மழை நேரங்களில் மரத்திற்கு கீழ் நிற்கவோ, செல்போனில் பேசவோ கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

News October 15, 2024

புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

image

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி உள்ளிட்ட பகுதியில் உள்ள மீனவர்கள் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடலில் அதிக காற்று வீசுவதால் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்லக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கடற்கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

News October 15, 2024

தேசியகல்வி உதவித்தொகை பெற நாளை கடைசி நாள்

image

தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரி கல்வி உதவி தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே கல்வி உதவித்தொகை பயன்களை பெறுமாறு கலெக்டர் அலுவலகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News October 15, 2024

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முக்கிய எண்கள் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மாவட்ட அவசர கட்டுபாட்டு அறை 1077, 04322-222207 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

News October 15, 2024

குடுமியான்மலையில் புகையிலை விற்ற இருவர் கைது

image

குடுமியான்மலையில் காரில் வந்து பெட்டிகடைகளுக்கு புகையிலை விற்பனை செய்வதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை கொண்டு சென்றது தெரியவந்தது இதனையடுத்து போலீசார் காரில் வந்த பரம்பூரை சேர்ந்த ஹக்கீம் ஒலியமங்களத்தை சேர்ந்த இளையராஜா ஆகியோரை கைது செய்தனர்

News October 14, 2024

புதுகை மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, புதுகை மாவட்டத்தில் அக்.15-ஆம் தேதி (செவ்வாய்) மற்றும் அக்.16-ஆம் தேதி (புதன்கிழமை) ஓரிரு இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 40-55 கி.மீ வரை பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 13, 2024

புதுகையில் மழைபாதிப்பு பகுதிகளை ஆட்சியர் ஆய்வு

image

புதுக்கோட்டையில் வடகிழக்கு பருவமழையால் கனமழை பெய்யும் என்று அறிவித்திருந்த நிலையில் நேற்று இரவு 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் மழைநீர் தேங்கிய சாந்தாரம்மன் கோயில், பூமார்க்கெட், வடக்குராஜவீதி, திலகர்திடல், அடப்பன்வயல் உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் மு.அருணா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் செல்ல வழி ஏற்படுத்திதர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News October 13, 2024

புதுக்கோட்டையில் நாளை குறைதீர் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நாளை திங்கள்கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ள இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்களுடைய தேவைகள் பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்க ஆட்சியர் அருணா அழைப்பு விடுத்துள்ளார்.

News October 13, 2024

புதுக்கோட்டையை ஆண்ட மன்னர்கள் ‘காலச்சுவடு’

image

புதுக்கோட்டை சமணர்கள், பௌத்தர்கள், சோழர்கள், பாண்டியர்கள், முத்தரையர்கள், நாயக்கர்கள், கிழவன் சேதுபதி, தொண்டைமான்கள் எனப் பலரும் ஆளப்பட்ட நிலப்பகுதி. தொண்டைமான்களால் இப்பகுதி ஆளப்படுகையில், இந்நிலம் நிலையான ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. அப்போது அவர்கள் ஆண்ட பகுதியைத் தொண்டைமான் சீமை என்றே அழைக்க விரும்பியிருக்கிறார்கள் என ஆவணங்களில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஷேர் செய்யவும்

News October 13, 2024

புதுகையில் வெளிவந்த இதழ்கள் “காலச்சுவடு”

image

புதுக்கோட்டையில் தாய்நாடு 1941, திருமகள் 1942, சந்திரோதயம் 1933, அணிகலன் 1941, பாலர் மலர் 1942, பாப்பா 1946, கரும்பு 1947, டமார 1946, இன்பம் 1941, கலைவாணி 1944, கலைச்செல்வி 1948 என்னும் செய்தித்தாள் 1908ஆம் ஆண்டு வந்தது. இதற்கான ஆண்டு சந்தா ₹5 ரூபாய் ஆகும். ஜனமித்திரன், தேச ஊழியன் ஆகிய செய்தி தாள்கள் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவை. இவை புதுகையிலிருந்து வெளிவந்த செய்தித்தாள்கள் ஆகும்.

error: Content is protected !!