India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகளை சந்தித்தார்.இந்த சந்திப்பில் பொதுமக்கள் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.அந்த மனுக்களை பெற்று கொண்ட புதுகை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா விரைவில் தங்களது கோரிக்கைகளை ஆய்வு செய்து தீர்வு செய்யப்படும் என கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து நேற்று(ஜூன் 17) 241 விசைப்படகுகளில் 1,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்களில் சிபிராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற சிபிராஜ், பாலச்சந்திரன், சாரதி, ராமதாஸ் ஆகியோர் நெடுந்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சிறை பிடித்துச் சென்றனர்.
புதுக்கோட்டை நகர் பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெப்பம் வாட்டி வந்த நிலையில் தற்போது புதுக்கோட்டை நகரப் பகுதியில் இன்று திங்கட்கிழமை இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த கனமழையினால் சாலையில் மழை நீர் ஆறு போல் ஓடியது. இந்த கன மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது குறித்து விசாரணை நடத்தியதோடு, சோதனையும் நடத்தினர்.இருப்பினும் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் சென்றது.இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய அறிவியல் ரீதியான விசாரணையில், குற்றவாளிகளை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைவான தீா்வு பெறுவதற்காக சிறப்பு மக்கள் நீதிமன்றம் வரும் ஜூலை 29 முதல் ஆக.3 வரை நடைபெறவுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தோரின் வழக்குகளையும் காணொலிக் காட்சி மூலம் சமரசத் தீா்வு காண மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
புதுக்கோட்டையில் நேற்று சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டி- ‘கோயில்களை இந்துக்களிடம் கொடுக்க வேண்டும் என்ற குரல் அவ்வப்போது எழுகிறது. அறநிலையத்துறையை எடுத்து விட்டால் கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பை யாரிடம் கொடுப்பது, எந்தக்குழுவிடம் கொடுப்பது, அவர்கள் யாரையெல்லாம் கோயிலுக்குள் விடுவார்கள். அம்பேத்கரும் பெரியாரும் பட்ட கஷ்டமெல்லாம் வீணாகிவிடும்’ என்றார்.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அதன்படி இன்று இரவு 7 மணி வரை புதுகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எய்ட்ஸ் நோயால் இறந்தோரை நினைவு கூறும் சர்வதேச எய்ட்ஸ் மெழுகுவர்த்தி ஏற்றும் நிகழ்ச்சி புதுகை மாவட்ட எச்ஐவியுடன் வாழ்வோர் கூட்டமைப்பின் தலைவர் ராமசாமி தலைமையில் நேற்று(ஜூன் 15)நடைபெற்றது. இதில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மேற்பார்வையாளர் ஜெயக்குமார், மேலாளர் கோபால், பாவை அறக்கட்டளையின் சத்யபிரியா, மரம் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் பேரா சா.விஸ்வநாதன்,செயலர் பழனியப்பா கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வருகின்ற 2025 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது வழங்கப்பட உள்ள பத்ம விருதுகளான பத்ம விபூசன், பத்ம பூசன், பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு தகுதியானவர்கள் வரும் 21ஆம் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணபிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு 04322 222270 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலுப்பூர் வருவாய் கோட்டாச்சியர் இருப்பவர் தெய்வநாயகி. இவரின் உதவியாளர் ராஜேந்திரன் டிரைவர் கனகபாண்டியன் இவர்கள் மூவரும் ஒரு காரில் நேற்று முன்தினம் மணல் கடத்துவதாக வந்த தகவலை ஆய்வு செய்தபோது மணல் கடத்தி வந்த மினிலாரி ஆர்டிஒ காரில் மோதி கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.இதில் ஆர்டிஒ கார் சேதமடைந்தது.மூவரும் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினர்.இதுகுறித்து நேற்று அன்னவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை
Sorry, no posts matched your criteria.