India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுகை, திருக்கோகர்ணம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள மாதா ஆலய 21 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன்
முக்கிய நிகழ்வான தேர் பவனி நேற்று இரவு எஸ்எம்எஸ் பங்கு ஆலய வளாகத்திலிருந்து தொடங்கியது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று புதுகை மாதா ஆலயத்தை சென்றடைந்தது. அங்கு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கறம்பக்குடி அருகே கோட்டைகாடு கிராமத்தை சேர்த்த விவசாயிக்கு சொந்தமான தைல மர காட்டில் நாணல் சருகுகள்
தீ பிடித்து எறிவதாக கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு வந்த
தகவலையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று எறிந்து கொண்டிருந்த தைல மரக்காடு முழுவதும் எரிவதற்குள் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விராலிமலை அருகே கொடும்பாளூர் கிராமத்தில் நேற்று அய்யன்குளத்தின் கரையின் ஒரு பகுதியில் இருந்த புளிய மரத்தி லிருந்து நேற்று கரும் புகை வெளியேறியது.
அதனைக்கண்ட அப்பகுதி மக்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு கொடுத்தனர் அதற்குள் அந்த மரத்தில் தீ
பரவியது. இதையடுத்து, இலுப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சியில் கணேசன் என்பவரை இன்று அவரது மூத்த மகன் வினோத்குமார் இரும்பு கம்பியால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அன்னவாசல் போலீசார் கிணற்றில் பதுங்கியிருந்த வினோத்குமாரை தீயணைப்புதுறையினர் உதவியுடன் கைது செய்தனர்.
திருப்பெருந்துறை ஊரில் உள்ள ஆவுடையார்கோயில் திருவாசகம் பாடப்பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். 1100 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட இக்கோவில் கட்டடக்கலை வியக்கும் வகையில் அமைத்துள்ளனர். இக்கோவிலுள் உள்ள தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு 90 அங்குலம் மற்றும் அகலம் 36 அங்குலமாகும். 5000 பேர் சேர்ந்து இத்தேரை இழுக்க முடியும். வியப்பில் ஆழ்த்தும் கற்சிலைகளை இங்கு காணலாம்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோடைக்கால குடிநீா் விநியோகப் பணிகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஐ.சா.மொ்சி ரம்யா வெள்ளிக்கிழமை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயல்பைவிடவும் அதிக வெயில் அடித்து வருவதால் நீா்நிலைகளில் தண்ணீா் இருப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. அதனை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.
புதுக்கோட்டை கீரனூா் அருகே ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழந்தாா். பாலகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்தவா் சுப்பையா இவா், கீரனூா் அருகே கிருஷ்ணபாரப்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தாா். சென்னை- காரைக்குடி பல்லவன் ரயில் மோதி அவா் இறந்தாா். இதுகுறித்து திருச்சி ரயில்வே போலீஸாரும், கீரனூா் காவல் நிலைய போலீஸாரும் விசாரித்து வருகின்றனா்.
இலுப்பூர் அருகே உள்ள குரும்பப்பட்டி கண்மாய் பகுதியில் பொதுஇடத்தில் சூதாட்டம் விளையாடுவதாக இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் இன்று அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்த குரும்பப்பட்டியை சேர்ந்த மகேந்திரன், மகேஸ்வரன்,நாகராஜ், சுப்பிரமணி ஆகிய 4 பேரை கைது செய்தனர்
இலுப்பூர் அருகே உள்ள குரும்பப்பட்டி கண்மாய் பகுதியில் பொதுஇடத்தில் சூதாட்டம் விளையாடுவதாக இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் இன்று அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்த குரும்பப்பட்டியை சேர்ந்த மகேந்திரன், மகேஸ்வரன்,நாகராஜ், சுப்பிரமணி ஆகிய 4 பேரை கைது செய்தனர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடைகாலம் ஆரம்பமான முதலே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்த நிலையில், மக்கள் நாள்தோறும் வெயிலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 107.6 டிகிரி செல்சியஸ் அடித்துள்ளது. இதனால் வியாபாரிகள் வியாபாரம் இல்லாமலும் . மாலை வேலைகளில் மக்கள் அதிகமாக வருவதாகவும் பணிச்சுமை அதிகமாவதாக தெரிவிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.