India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாத்திமாநகரில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு இன்று கிடைத்த ரகசிய தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பாத்திமாநகரில் ஒரு பெட்டிகடையில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட பூதக்குடியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து என்பவரின் மகன் பாக்கியராஜ் (29). இவருக்கும்
இவரது தந்தைக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த பாக்கியராஜ் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் சிங்காரவேலு கொடுத்த புகாரின் பேரில் உடையாளிப்பட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராசு விசாரணை நடத்தி வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மார்க் வருமானம் 70% உயர்ந்துள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 7.9 கோடி ரூபாயாக இருந்த வருமானம் இப்போது கிட்டத்தட்ட ரூ.13 கோடிக்கும் மேல் வருவாய் கிடைத்துள்ளது. இது எப்போதும் இல்லாத அளவிற்கு வருமானம் 70% கிடைத்துள்ளதாக டாஸ்மார்க் நிர்வாகத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (01.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

புதுகை அடுத்த கைக்குறிச்சி பாப்பா வயலில் மாயக்கண்ணன் என்பவரது வீட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுவர்கள் கம்பி மத்தாப்பு பற்ற வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது வீட்டிற்குள் இருந்த துணிகளில் பட்டு தீ மல மல பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் உயிர் தப்பினர். வீட்டுக்குள் இருந்த ஐம்பதாயிரம் பணம் மற்றும் முக்கியம் ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பல் ஆகின.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (31.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் 100 ஐ டயல் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவுக்கு 2024-ம் ஆண்டிற்கான ‘மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நடவடிக்கை, விசாரணை, தடய அறிவியலில் சிறந்து விளங்கியோருக்கு கேந்திரிய க்ரிக்மந்த்ரி தக்ஷதா பதக் 2024 விருதுகளை மத்திய உள்துறை அறிவித்துள்ளது. கேந்திரிய க்ரிமினல் மந்திரி தக்ஷதா பதக் விருதை புதுக்கோட்டை எஸ்.பி. வந்திதா பாண்டே பெற்றார்.

புதுகை சமஸ்தானம் 1789-1807 விஜய ரகுநாத தொண்டைமான் இறந்ததும் அரசி பிரகன்னநாயகி ஆயி அம்மாள் உடன்கட்டை ஏற முன்வந்தார் 10,9 ஆண் பிள்ளைகளை ஆட்சியாளர் ஜான் பிளாக் பர்ன் ஒப்படைத்துவிட்டு சிதையில் இறங்கி உயிர் நீத்தார். அந்த இடம்தான் மாலையிடு எனப்படுகிறது அவரது நினைவாக திருமயம் சாலையில் மாலையிட்டில் கோவில் ஈடுபாடுகள் இன்றும் காணப்படுகிறது. Way2news “காலச்சுவடு” தொடரும்…

தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் போது கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (30.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் 100 ஐ டயல் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.