Pudukkottai

News October 8, 2024

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை: ஆட்சியர் அழைப்பு

image

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்துள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, 10ஆம் வகுப்பில் தோல்வி பெற்றவர்களுக்கு மாதம் 200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300, பட்டதாரிகளுக்கு மாதம் 600 வீதம் 3 ஆண்டுக்கு பெற புதுக்கோட்டை ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 8, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்

image

புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை காலை 9 மணியிலிருந்து 2 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விருப்பமுள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 8, 2024

மன்னர்கள் பெயரில் அளவைகள் “காலச்சுவடு”

image

17ஆம் நூற்றாண்டில் மன்னர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் பெயரில் அக்காலத்தில் “அளவைகள்” இருந்தன புதுக்கோட்டையில் புதுக்கோட்டை படி சின்ன படி ,பெரிய படி, பல்லவன் படி, ஆகிய ஆகியவையும் தஞ்சை ஆட்சியாளராக இருந்த ஹாரிஸ் என்பவரது நினைவாக ஹாரிஸ் படி என்ற அளவையும் புழக்கத்தில் இருந்தன.
பிற்காலத்தில் அதுவே ஒரு படி, அரைப்படி, கால் படி, வீசம், என மாறியது. Way 2 News காலச்சுவடு தொடரும். ஷேர் செய்யவும்

News October 8, 2024

புதுக்கோட்டையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

image

வரலாற்றிலேயே புதுக்கோட்டையில் இருந்து தூத்துக்குடிக்கு முதல் நேரடி சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து விடப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டையில் புதன்கிழமை காலை 9:00 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு மதியம் 1.50 மணியளவில் சென்றடையும் பிறகு தூத்துக்குடியிலிருந்து மாலை 4.15 மணி அளவில் புறப்பட்டு புதுக்கோட்டைக்கு 9 மணியளவில் வந்தடையும். இது ஆயுத பூஜைக்காக ஒரு நாள் விடப்பட்ட சிறப்பு ரயிலாகும்.

News October 8, 2024

புதுக்கோட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களில் மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட உள்ளது. புத்தக ஆர்வலர்கள் தங்களது விவரங்களை மாவட்ட நூலக அலுவலர், மாவட்ட நூலக ஆணைக்குழு, மேல 4-ம் வீதி, புதுக்கோட்டை என்ற முகவரியில் வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News October 8, 2024

திருவரங்குளம் அருகே இளைஞர் தற்கொலை

image

திருவரங்குளம், அழகம்மாள் புரத்தை சேர்ந்தவர் செல்வி (40) இவரது மகன் வைத்தீஸ்வரன் (20), திருமணம் ஆகாத நிலையில் மன உளைச்சல் இருந்துள்ளார். நேற்று மாலை 4 மணிக்கு மேல் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் புதுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது. தாய் கொடுத்த புகார் பேரில் வல்லத்திராக்கோட்டை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News October 7, 2024

மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வரும் 9ஆம் தேதி புதன்கிழமை மற்றும் 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களில் புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் நடைபெற உள்ளது. எனவே மாணவர்கள் பங்கு பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அருணா தகவல் தெரிவித்துள்ளார்.

News October 7, 2024

கழிவறையில் கேமரா பொருத்தி ஆபாச படம்: வாலிபர் கைது

image

கந்தர்வகோட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் சலூன் கடை நடத்துபவர் மிதுன். இவர் நேற்று காலை அங்குள்ள கழிவறையில் ரகசிய கேமராவை பொருத்தி ஆபாச படங்கள் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வணிக வளாகத்தில் உரிமையாளர் நேற்று மாலை அளித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மிதுனை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

News October 7, 2024

புதுக்கோட்டையில் 26 நெல் வகைகள்: “காலச்சுவடு”

image

புதுகை மாவட்டத்தில் 1950க்கு முன் 26 வகையான நெல் வகைகள் பயிரிடப்பட்டது. கருடன் சம்பா, ராமன் சம்பா, காரையூர் சம்பா, ராகாபும் சம்பா, பாகன் சம்பா, நெல்லூர் சம்பா, ரெங்கமன்னார், புளூதிசம்பா, மூங்கில் சம்பா, ஈக்கி சம்பா, மிளகு சம்பா, கார்த்திகை சம்பா, சீராக சம்பா, முத்து வெள்ளை, பாவமணியன் உள்ளிட்ட 26 வகையான நெல்மணிகள் பயிரிடப்பட்டுள்ளது. இவை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

News October 7, 2024

கோட்டைப்பட்டினம் அருகே ஆண் சடலம் மீட்பு

image

புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வாய்க்காலில் ஒருவர் இறந்த நிலையில் கிடைப்பதை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.