India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த ஓராண்டு காலமாக புதுக்கோட்டையின் மாவட்ட ஆட்சித் தலைவராக செயல்பட்டு, தற்போது புதுக்கோட்டையிலிருந்து விடைபெற்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனராக பணி மாறுதலில் செல்லும் ஐ.சா.மெர்சி ரம்யாவை மரியாதை நிமித்தமாக இன்று (ஜூலை.18) புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தஞ்சை அருகே சமயபுரத்திற்கு பாதயாத்திரை சென்ற பக்தர்களின் மீது வாகனம் மோதிய விபத்தில், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சத்தை நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கண்ணுகுடிப்பட்டி பகுதியை சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் இன்று வழங்கினர்.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுகையில் அறந்தாங்கி தோட்டக்கலைத்துறை மூலம் டிராகன் சாகுபடி செய்ய விருப்பும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.96 ஆயிரம் மானியத்தில் டிராகன் செடிகள்,இடுபொருள்கள் வழங்கப்பட உள்ளன. புதிதாக முந்திரி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு 1 ஹெக்டேருக்கு ரூ.12000 மானியத்தில் முந்திரி ஒட்டுச்செடிகள், இடுபொருள்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் விவரங்களுக்கு 95787 70294, 89406 56492 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் அருகே இன்று விபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். காயமடைந்து சிகிச்சையில் இருப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் சிறப்பு சிகிச்சைக்கு உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையை சேர்ந்த சிலர் பாதையாத்திரையாக சென்றபோது விபத்தில் சிக்கினர். இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்தோர் சிகிச்சையில் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெட்டிக்கடைகள், மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் எலிவிஷம், கரப்பான் கொல்லிகள், கொசுவிரட்டிகள் போன்ற வீட்டில் பயன்படுத்தும் பூச்சிகொல்லிகளை விற்பனை செய்ய உரிமம் பெறுவது அவசியம். உரிமம் இல்லாமல் விற்பனை செய்வது பூச்சிக்கொல்லி சட்டம் 1968 இன் படி குற்றமாகும். உரிமம் பெற வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தனிநபர் மற்றும் குழுக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் ரூ.15 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://tabcedco.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.