India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, புதுகையில் நியமனம் பெற்றுள்ள 44 காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே பணி நியமன ஆணைகளை நேற்று வழங்கினார். அப்போது அவர் ‘பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்’ என வாழ்த்து தெரிவித்தார்.

பேராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் இன்று வீட்டு மாடியில் பட்டம் விட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது பட்டம் வீட்டின் முன் சென்ற மின்சார கம்பியில் விழுந்தது. அதனை எடுப்பதற்கு முயலும் போது மின்சாரம் தாக்கி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடல் கூறாய்வுக்காக சிறுவனின் உடல் விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து விராலிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளது.இதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்க

நாளை மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தும் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நாளை காலை 9 மணி அளவில் பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என அறந்தாங்கி அதிமுக நகர செயலாளர் ஆதிமோகன் தெரிவித்துள்ளார்.

கீழநிலை அருகில் உள்ள கே.ராயபுரம் ஊராட்சியை சேர்ந்த மணி, வள்ளி தம்பதியரின் மகன் மகேஷ்குமார் திருசெந்தூரில் துணை காவல்துறை கண்காணிப்பாளராக நேற்று பணி ஏற்றுள்ளார். இவர் பணியில் சீரும் சிறப்புமாக பணியாற்றி பல்வேறு உயர் நிலை பொறுப்புகளை அடைய கே ராயபுரம் பகுதி மக்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இச்செய்தியை சமூகவலை தளங்களில் பெருமையுடன் பகிர்ந்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு, ஆலங்குடி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் இன்று (26.11.2024) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதி மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. ஷேர் செய்யவும்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் அடிக்கடி வாகனங்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்ததையடுத்து இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு துப்பு துலக்கிய போலிஸார் வாகனங்களை திருடிய வரிசைமுகமது(23), தாரணி(20), ஜீவா(எ) கணேசன் ஆகிய 3 பேரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 8 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

ஆலங்குடி மற்றும் வடகாடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (நவ 26) நடைபெற உள்ளது. இதனையொட்டி, பாச்சிக்கோட்டை, களபம், ஆலங்குடி, குப்பக்குடி, வெட்டன்விடுதி, கோட்டைக்காடு, மாங்கோட்டை, வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என ஆலங்குடி உதவி செயற் பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கடந்த 16,17- ந் தேதிகளிலும் நேற்று முன்தினம், நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வமுடன் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மொத்தம் 24,869 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கந்தர்வகோட்டை பெரிய கோட்டையை சேர்ந்தவர் கலைச்செல்வன் இவரது மகன் 4 வயது ஆண் குழந்தை நேற்று மதியம் 12 மணியளவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார் வீரடிப்பட்டி சேர்ந்த சரவணன் ஓட்டி வந்த மகேந்திரா பொலிரோ வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சாய்பிரணவ் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.