Pudukkottai

News May 28, 2024

புதுகை மயான பகுதியை சீரமைக்கும் பணி ஆய்வு

image

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகராட்சி பகுதி போஸ் நகர் திருக்கட்டளை சாலையில் அமைந்துள்ள பூத உடல் நல்லடக்கம் செய்யும் மயான பகுதியை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. இந்த பணிகளை புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா மற்றும் புதுகை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News May 28, 2024

புதுக்கோட்டை அருகே நண்டு விலை குறைவு

image

கடல் உணவில் நண்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவாக உள்ளது. இந்நிலையில், மணமேல்குடி மீன் மார்க்கெட்டில் கடந்த 2 மாதமாக ஒரு கிலோ நண்டு ரூ.500-க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நாட்டுப்படகு மீனவர் வலையில் சிறிய நண்டு பெரிய நண்டு என ஏராளமான நண்டுகள் கிடைப்பதால் மார்கெட்டில் நேற்று நண்டு ஒரு கிலோ ரூ.350க்கு விற்பனையானது.இதனால் நண்டு அதிகமான
நண்டுகளை வாங்கி செல்கின்றனர்.

News May 27, 2024

ஐடி மாவட்ட செயலாளருக்கு மாஜி அமைச்சர் பாராட்டு

image

அதிமுக ஐடி விங்ஸ் திருச்சி மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் பல்வேறு இடங்களில் சிறந்த முறையில் கோடை கால தண்ணீர் பந்தலை அமைத்து பொதுமக்கள் தாகம் தீர்க்க தண்ணீர், மோர், சர்பத்,  பழவகைகள், ஐஸ்கிரீம், டீ, சம்சா  உள்ளிட்டவைகளை வழங்கப்பட்டது. இதற்காக இன்று மு.அமைச்சர்,
சி.விஜயபாஸ்கர் MLA பணியை பாராட்டி, ஐடி மாவட்டசெயலாளர் ரஞ்சித்குமாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

News May 27, 2024

புதுகை ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்

image

புதுகை ஆட்சியரக கூட்டரங்கில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் வழங்குவது குறித்தும், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்தும் மற்றும் கோடைகால மழை குறித்தும், அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் இன்று (27.05.2024) நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News May 27, 2024

அன்னவாசல் அருகே சர்வேயர் பலி

image

புதுக்கோட்டை, வாராப்பூர் நெருஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் மதியழகன் இவர் திருமயம் தாலுகா அலுவலகத்தில் நில அளவை பிரிவில் பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் அன்னவாசல் அருகே உள்ள கடம்பராயன்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மதியழகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

News May 26, 2024

புதுகை அருகே வடமாடு ஜல்லிக்கட்டில் பரிசு மழை

image

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்க நாட்டை சார்ந்த காட்டுப்பட்டியில் முனீஸ்வரர் வடமாடு ஜல்லிக்கட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு சிறந்த காளைகளுக்கும், சிறந்த மாடுபிடி அணிக்கும் பல்வேறு சிறப்பு பரிசுகளை வழங்கினார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News May 26, 2024

புதுக்கோட்டை அருகே 11 பேர் காயம்

image

பொன்னமராவதி அருகே காரையூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை, பொன்னமராவதி வட்டாட்சியர் எம்.சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த காளைகள் பங்கேற்றன. இதில் போட்டியில் கலந்து கொண்ட 10 பேருக்கு இலேசான காயம் ஏற்பட்டது. மஞ்சுவிரட்டில் 13 காளைகள் பங்கேற்றன.

News May 26, 2024

புதுக்கோட்டை:’பாவேந்தரின் தமிழுக்கு அமுதென்று பேர்’ நிகழ்ச்சி!

image

புதுக்கோட்டையில் நேற்று தமிழ்ச்சங்கத்தின் சார்பில் ‘பாவேந்தரின் தமிழுக்கு அமுதென்று பேர்’ என்ற நிகழ்ச்சி தமிழ்ச்செம்மல் நெ.இரா.சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் புலவர் கு.ம.திருப்பதி ‘பாவேந்தரும் தமிழும்’ என்ற தலைப்பில் பேசினார். கவிஞர் மு.கீதா ‘பாவேந்தரும் மொழியும்’ என்ற தலைப்பில் பேசினார். கவிஞர் காசிநாதன்
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிறைவில் பேரா. சா. விஸ்வநாதன் நன்றி கூறினார்.

News May 25, 2024

திருமயம் அருகே ஒருவர் பலி!

image

திருமயம் அருகே குருவிக்கொண்டான்பட்டியைச் சேர்ந்தவர் கல்யாணி(55). இவரது மனைவி லெட்சுமி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. சம்பவத்தன்று குடும்பத்தகராறில் விஷம் குடித்து மயங்கி கிடந்த கல்யாணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பனையபட்டி போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 25, 2024

புதுகை: நலத்திட்ட உதவிகள் வழங்க திமுக முடிவு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளில் (ஜூன் 3) பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக முடிவு செய்துள்ளது. புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

error: Content is protected !!