Pudukkottai

News October 11, 2025

புதுக்கோட்டை: டிராபிக் FINE-ஐ ரத்து செய்யணுமா?

image

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு<> இங்கே க்ளிக் செய்து<<>> உங்கள் பெயர், மொபைல் எண், சலான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு சலான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 11, 2025

புதுக்கோட்டையில் போட்டித் தேர்வு- கலெக்டர் அறிவிப்பு

image

புதுகை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுநர் ஆகிய பணியிடங்களுக்கு போட்டி தேர்வு நடைபெற உள்ளது. அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 10 தேர்வு மையம், புதுகை கல்வி மாவட்டத்தில் 15 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6631 தேர்வு எழுத உள்ளனர் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News October 11, 2025

புதுக்கோட்டையில் ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் 83 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5. கடைசி நாள்: 09.11.2025
6.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே CLICK<<>> செய்க.
7. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News October 11, 2025

புதுக்கோட்டை:இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று அக்டோபர்-10 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News October 10, 2025

புதுகை: கிராம ஊராட்சி செயலர் வேலை!

image

புதுகை மக்களே தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணி: கிராம ஊராட்சி செயலர்
2.கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு
3.சம்பளம்: ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
4.ஆன்லைனில் விண்ணப்பம்:<> Click<<>> Here
பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு டிசம்பர் 17-ம் தேதி பணி நியமன ஆணை வழங்கபடவுள்ளது. நீங்களும் உடனே Apply பண்ணுங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News October 10, 2025

புதுக்கோட்டையில் ரேஷன் குறைதீர் முகாம்

image

புதுகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் நாளை (அக்.,11) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ரேஷன் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் ஆகிய சேவைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News October 10, 2025

புதுக்கோட்டை: கனரா வங்கியில் வேலை APPLY NOW!

image

கனரா வங்கியில் தமிழ்நாடு முழுவதும் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. பணி: Graduate Apprentices
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.15,000
4.வயது வரம்பு: 20-28 (SC/ ST-33, OBC 31)
5. கடைசி தேதி: 12.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> இங்கே கிளிக் <<>>செய்யவும். ஷேர் பண்ணுங்க!

News October 10, 2025

புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

புதுகை ஆட்சியர் அலுவலகத்தில் வரும் அக்.,17-ம் தேதி காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்‌. வேளாண் உழவர் நலத்திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்களை குறித்து தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News October 10, 2025

புதுகை மக்களே இனி அலைச்சல் இல்லை!

image

புதுகை மக்களே..உங்களது சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டாம். நீங்கள் https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளையும் பெறலாம். உடனே இத்தகவலை SHARE பண்ணுங்க!

News October 10, 2025

புதுகை: விபத்தில் சிக்கிய நீதிபதி சென்ற கார்

image

அறந்தாங்கி நீதிபதி சத்ய நாராயணமூர்த்தி நேற்று இரவு 8 மணியளவில் புதுக்கோட்டையில் மற்றொரு நீதிபதியை சந்தித்துவிட்டு தனது காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கேப்பறை அருகே புதுகை நோக்கி வந்த தனியார் பஸ் மோதியதால் கார் அருகில் இருந்த சென்டர் மீடியன் கட்டையில் மீது மோதி நீதிபதி சத்ய நாராயணமூர்த்தி சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து வல்லத்திராகோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!