India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுகை மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டங்கள் புதுகை செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதந்தோறும் முதல் வியாழக்கிழமையும், கீரனூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 3 வது வியாழக்கிழமையும், திருமயம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 4 வது வியாழக்கிழமையும், ஆலங்குடி செயற்பொறியாளர் அலுவலகத்தில் 3 வது செவ்வாய்க்கிழமையும் நடைபெறும் என மேற்பார்வை பொறியாளர் த.அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய மின் பகிர்மான வட்ட கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (02.01.25) நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறையை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டைசின்ன பூங்கா எதிரே நாம் தமிழர் கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை புதுக்கோட்டை காவல் துறையினர் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் இப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த வந்திதா பாண்டே திண்டுக்கல் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுகை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அபிஷேக்குப்தா விரைவில் பதவியேற்க உள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் புதுக்கோட்டையில் சைக்கிள் போட்டி வருகின்ற 4ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாணவ மாணவிகள் 13,15,17 பிரிவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் போட்டியில் பங்கு பெற புதுக்கோட்டை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பாலன் நகர் ரயில்வே கேட் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மாற்றுப் பாதையை பயன்படுத்திக் கொள்ள ரயில்வே துறை சார்பில் லித்தோ பேனர் வைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குருப் 2 மற்றும் 2A தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட இருப்பதாகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்பட இருப்பதாகவும் பயிற்சி பெற விரும்புவோர் மேலாளர் அலுவலகம் தாட்கோ புதுக்கோட்டை என்ற முகவரியிலும் 04322-221487 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விபரம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமாயின் இதில் குறிப்பிடப்பட்டுள்ள 100 மற்றும் 9498100730 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மணமேல்குடியில் வசித்து வரும் கவிஞர் வெண்ணிலவன், பல்வேறு கதைகள் துணுக்குகள் செய்திகளை புத்தகங்களாகவும் வார, மாத இதழ்களிலும் வெளியிட்டு வருகிறார். மிகச் சிறந்த இலக்கியவாதியான இவரது சேவையை பாராட்டி மதுரை இலக்கியப் பேரவை, இவருக்கு இன்று மகாகவி பாரதியார் விருதினை வழங்கியது. இந்த விருதினை, துணை மேயர் நாகராஜன், கவிஞருக்கு வழங்கினார். நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள், பாலியல் வன்கொடுமை, கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து நாளை (டிச. 30) ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக விராலிமலை எம்எல்ஏ, விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார், இதில் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.