India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் நாளை (10.08.2024) சனிக்கிழமை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் 19.08.2024 திங்கட்கிழமை அன்று நடைபெறும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். பள்ளி மேலாண்மைகுழு மறுகட்டமைப்பு தொடர்பான கூட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடவாளம் அடுத்த செட்டியாபட்டி சேர்ந்த மாரிக்கண்ணு என்பவர் சமயபுரம் நடைபயணம் மேற்கொண்ட போது விபத்தில் காயமடைந்து, மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இந்நிலையில் இன்று அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு சென்னை, மதுரை, தஞ்சாவூர் பகுதிக்கு எடுத்துச் சென்றனர். இந்த செயல் புதுக்கோட்டை மக்களின் மத்தியில் மனநெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷேர் செய்யவும்
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்ற நிலையில், ஈட்டி எறிதல் போட்டியில் சென்ற முறை நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற நீரஜ்சோப்ரா இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். அவருக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் X தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம், அனைத்து வருவாய் வட்டங்களிலும் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைகள், நியாயவிலை கடை தொடர்பான குறைகளை நிறைவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அருணா நேற்று அழைப்பு விடுத்துள்ளார். இப்போட்டி தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு இணையாக நடைபெறுகிறது. எனவே இதில் அதிக அளவு வீரர்கள் கலந்து கொள்ள வேண்டும். மேலும் தொடர்புக்கு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் 74017 03498 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார். SHAREIT
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் நடக்கும் பல்வேரு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் திருவரங்குளம் தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் மற்றும் கீழாத்தூரில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் 1000 கல்வி உதவித்தொகை வழங்கும் “தமிழ் புதல்வன்” திட்டத்தை துவங்கி வைக்கிறார். ஷேர் செய்யவும்
திருச்சி முன்னாள் காங்கிரஸ் கட்சி எம் பி முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவரும் முன்னாள் மத்திய மாநில அமைச்சருமான திருநாவுக்கரசர் வருகின்ற 10ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். அது குறித்த நிகழ்ச்சியின் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிட்டுள்ளனர். புதுக்கோட்டை நகரப் பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.
சிவபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ் புதல்வன் திட்டத்தினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று துவக்கி வைக்க உள்ளார். இதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாணவர்களின் பெற்றோர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுதில்லி ககோரி எதிர்ப்பின் நூற்றாண்டு தொடக்க விழாவில் சுகாதார பாதுகாப்பு குழந்தைகள் பாதுகாப்பு பேரிட நிவாரணம போன்றவற்றில் 10 ஆண்டுகளாக மக்கள் சேவை பாராட்டி தென்னிந்தியருக்கான சிறப்பு விருதினை மத்திய அமைச்சர்கள் முன்னால் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் புதுக்கோட்டை Dr.R G ஆனந்துக்கு வழங்கினர்
ஆலங்குடியில் நாளை தமிழ் புதல்வன் திட்டத்தினை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைக்கிறார். கீழாத்தூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். பின்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மாணவர்களின், பெற்றோர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை பி. ஆர் ஓ அலுவலகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.