Pudukkottai

News August 10, 2024

HCL நிறுவனத்தில் வேலை

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News August 10, 2024

அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 32 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, புதுகை, பொன்னமராவதி, அன்னவாசல், ஆலங்குடி, அறந்தாங்கி, விராலிமலை உள்ளிட்ட சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 10, 2024

புதுக்கோட்டையில் தேசியக்கொடி விற்பனை தொடக்கம்

image

புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவிக்கையில், 78வது சுதந்திரத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படும் என்றும், இதன் விலை ₹25 ஆகும். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களில் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

News August 10, 2024

புதுக்கோட்டையில் கல்வி கடன் முகாம்

image

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து வருகின்ற 17ஆம் தேதி காலை 11 மணியளவில் மாமன்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறுகிறது. இது குறித்த அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த கல்விக் கடன் முகாமில் 15க்கும் மேற்பட்ட வங்கிகள் கலந்து கொள்கின்றன. இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News August 10, 2024

புதுக்கோட்டை எக்ஸ் எம்பி அறிவிப்பு

image

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று புதுக்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் அன்பழகன் 50 ஆண்டுகள் வழக்கறிஞர் பணி நிறைவு விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய, மாநில அமைச்சரும், எக்ஸ் எம்பியுமான திருநாவுக்கரசர் கலந்து கொள்ள இருந்த நிலையில், உடல்நிலை சரியில்லாததால் பங்கேற்கவில்லை என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

News August 10, 2024

புதுக்கோட்டையில் நாளை கனமழை

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 11ஆம் தேதி அனேக இடங்களில் மழை பெய்யும் என்றும் வங்க கடலில் சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வரை வீச கூடும், எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு “மஞ்சள் அலர்ட்” விடப்பட்டுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

News August 10, 2024

புதுக்கோட்டையில் பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கைது

image

புதுக்கோட்டையில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஜெயபிரகாஷ் மணிகண்டன், சுரேஷ் பாண்டியன், மகாதேவன், பாண்டியன் ஆகிய 5 பேர் போலீசார் நடத்திய சோதனையில் பிடிபட்டனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் அனைவரும் கடலூர், திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது. இவர்கள் யாராயினும் கொலை செய்ய திட்டமிட்டார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News August 10, 2024

சாலை விபத்தில் 2 பேர் பலி; இருவர் படுகாயம்

image

புதுக்குடி அருகே நேற்று இரவு இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் மேலும் படுகாயமடைந்த இரண்டு நபர்களை அருகிலுருந்தவர்கள் மீட்டு மணமேல்குடி தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இறந்து போன இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மணல்மேல்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

News August 10, 2024

புதுகையில் கலந்தாய்வுக் கூட்டம்

image

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார் தலைமையில், இன்று ஆட்சியரகத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் தொழிற்சங்கப் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஷேர் செய்யவும்

News August 9, 2024

கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் கலெக்டர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் பொ.செந்தில்வடிவு, முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் பலர் கலந்து கொண்டனர். 

error: Content is protected !!