Pudukkottai

News January 15, 2025

புதுகை: வன்னியவிடுதியில் ஆட்சியர் ஆய்வு 

image

ஆலங்குடி வட்டம், வன்னியன்விடுதியில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா  இன்று (15.01.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

News January 15, 2025

புதுகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

 குளத்தூர் வட்டம், மங்கதேவன்பட்டியில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா அவர்கள் இன்று (15.01.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.அ.அக்பர்அலி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

News January 15, 2025

100 ஆண்டுகளை நிறைவு செய்த அன்னவாசல் காவல் நிலையம்

image

புதுக்கோட்டை மாவட்டம்  அன்னவாசல் காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு. 100-ஆண்டு முடிவடைந்ததை அடுத்து காவல் நிலையம் நூற்றாண்டு விழாவை கொண்டாட தயாராகிறது இதனையடுத்து காவல் நிலையம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் அந்த காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் திருமதி லதா அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

News January 14, 2025

சாலையின் தடுப்பு சுவரில் மோதி ஒருவர் பலி

image

ஆவுடையார்கோவில், மீமிசல் குமரப்பன் வயல் பகுதியை சேர்ந்த வசந்த் (23), மனோஜ் (20) இருவரும் டூவீலரில் நேற்று அப்பகுதிக்கு சென்றபோது மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொன்பேத்தி சாலையில் தடுப்புகட்டையில் டூவீலர் மோதி ஏற்பட்ட விபத்தில் வசந்த் அதே இடத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த மனோஜ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து திருப்புனவாசல் போலீஸார் விசாரிக்கின்றனர்.

News January 14, 2025

புதுகை : கிராம சபை கூட்டம் 26 ஆம் தேதி நடக்கிறது!

image

புதுகை மாவட்டத்தில் 497 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் வருகிற 26 ஆம் தேதி நடக்கிறது. இதில் கிராம ஊராட்சி செலவினம் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை, ஜல் ஜீவன் மிஷன் திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதால், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தோர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் மு.அருணா அழைப்பு விடுத்துள்ளார்.

News January 14, 2025

இளம் நெறிஞர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் ஆட்சியர்

image

மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்க அலகில் பணியாற்ற நெறிஞர் பதவிக்கு பணியிடம் நிரப்பப்பட உள்ளதால், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா இன்று இரவு ஆட்சியரகத்தில் இருந்து தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் மாதம் 50,000 தொகுப்பு ஊதியம் பெறலாம் எனவும் தகுதியானவர்கள் புள்ளியியல் துறை அலுவலகத்தில் 27.1.25 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News January 13, 2025

புதுகை: குறைந்த வாடகையில் அறுவடை இயந்திரங்கள் 

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் தற்போது சம்பா நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக வேளாண் துறை சார்பாக குறைந்த விலையில் அறுவடை இயந்திரங்கள் வழங்கப்படுவதாகவும், விவசாயிகள் இதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் உழவன் செயலி மூலமாக பதிவு செய்து அறுவடை இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 13, 2025

ஆட்சியர் அறிவிப்பு வெளியீடு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரண்டு தினங்களில் மாவட்டம் முழுவதும் டாஸ்மார்க் கடைகள், மதுபான கூடங்கள் அந்நிய மற்றும் உள்நாட்டு தயாரிப்பு விற்பனை செய்யும் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் இன்று மாலை ஆட்சியரகத்தில் இருந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News January 13, 2025

புதுக்கோட்டையில் அருளும் நாகநாதசுவாமி

image

புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் எனும் கிராமத்தில் உள்ள நாகநாதசுவாமி கோயில் ராகு, கேது தோஷம் நீங்க வழிபடும் பிரசித்தி பெற்ற தலமாகும். இக்கோயிலானது கிபி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் என்று கூறப்படுகிறது. இக்கோயிலில் உள்ள சுனையில் பங்குனி இறுதியில் (அ) சித்திரை தொடக்கத்தில் ஒலி கேட்பதாகக் கூறப்படுகிறது. உங்கள் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களை கமெண்ட் செய்யுங்கள். SHARE NOW.

News January 12, 2025

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 நபர் கைது

image

கோட்டைப்பட்டினம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 70 லட்சம் மதிப்புடைய 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அது சம்பந்தமாக லாரியின் உரிமையாளர் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு காவல்துறை விசாரணையின் பின்பு 4 நபர் காவல் துறையினர் கைது செய்து இன்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!