Pudukkottai

News August 13, 2024

புதுக்கோட்டையில் வட்டார மேம்பாட்டு கூட்டம்

image

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில், தமிழக அரசின் வளமிக்க வட்டார மேம்பாட்டு திட்டம் சார்பில், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான மாவட்ட அளவிலான திட்டக்குழு கூட்டம், ஆட்சியர் அருணா தலைமையில், மாநில திட்டக்குழு கூடுதல் முழு உறுப்பினர் முனைவர். எம். விஜயபாஸ்கர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News August 13, 2024

நிதி மோசடி வழக்கில் தேவநாதன் கைது

image

சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை அருகே கட்டியாவயல் என்னும் இடத்தில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக முதலீடு பெற்று வாடிக்கையாளரை ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

News August 13, 2024

40 நிமிடம் பவர் கட் – பரிதவித்த நோயாளிகள்

image

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 40 நிமிடங்களாக மின்சாரம் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும், தீவிர சிகிச்சை பிரிவும் ஸ்தம்பித்தது. மருத்துவமனையே இருளில் மூழ்கியதால், நோயாளியுடன் வந்த உதவியாளர்களும் பெரும் அவதியடைந்தனர். இது குறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 1 மணி நேரத்திற்கு பின் நிலமை சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News August 13, 2024

புதுக்கோட்டை பகுதிகளில் மின்தடை

image

புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (ஆக. 14) மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நகா், பாரி நகா், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், அம்மையாப்பட்டி, கடையக்குடி, லெணாவிலக்கு, பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2024

திருச்சியில் ஊழியர் மர்ம மரணம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (44). இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று தங்கியிருந்த அறையில் மயங்கி கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர், மாரடைப்பில் இறந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்தனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

News August 13, 2024

புதுக்கோட்டை ஆட்சியர் அழைப்பு

image

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி காலை 11 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டு, சிறப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News August 13, 2024

புதுக்கோட்டை ஆட்சியர் அழைப்பு

image

புதுக்கோட்டையில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மானியம் வழங்கப்படுகிறது.இதற்கு குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக இருத்தல் வேண்டும், 20 வயது பூர்த்தியாக இருக்க வேண்டும், பயனாளிகளுக்கு ஆண்டு வருமானம் ஒரு லட்சம் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் அரசால் 3 லட்சம் மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்தார்.

News August 13, 2024

அமைச்சர் மெய்யநாதனை சந்தித்து வாழ்த்து பெற்ற மேயர்

image

சென்னையில் தமிழக முதலமைச்சர் புதுக்கோட்டை மாநகராட்சியாக அறிவித்து அதற்கான ஆணையை புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் இடம் வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதனிடம் காண்பித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் மாநகரச் செயலாளர் செந்தில் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News August 13, 2024

மருத்துவ முகாமில் சட்டத்துறை அமைச்சர்

image

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் கோயம்புத்தூர் இதயங்கள் அறக்கட்டளை இணைந்து வரும் 14ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் வகை சர்க்கரை நோய் குழந்தைகள் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொள்கிறார் என ரோட்டரி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

News August 12, 2024

கொன்னையூரில் நாளை பார்வையிடுகிறார் எம்பி

image

சுதந்திர தினத்தை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியிருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் இருசக்கர வாகன பேரணியை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி கார்த்திக் சிதம்பரம் நேரில் பார்வையிட இருக்கிறார்.

error: Content is protected !!