India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆலங்குடி பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி அருகே கோட்டைக்காடு மாதா கோவில் தெருவை சேர்ந்த பிரான்சிஸ் ( 52) தோட்டத்தில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 40 லி சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் வடக்கு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது தென்னந்தோப்பில் உள்ள ஒரு மரத்தில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தது. இந்நிலையில் தோட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 8 பேரை கதண்டுகள் கடித்தன. இதையடுத்து அப்பகுதி மக்கள் 8 பேரையும் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<

தஞ்சை, பூண்டி மாதாகோவில் அருகே விஷ்ணுபேட்டை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (43) என்பவர் மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக உள்ளார். இந்நிலையில் நேற்று தஞ்சைக்கு அவரது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கந்தர்வகோட்டை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. உடனே அவரை மீட்டு கந்தர்வகோட்டை GHக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

கீரனூர் அருகே குளத்தூர் பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த பாலு என்பவரது மனைவி லட்சுமி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது முகமூடி அணிந்த மர்ம அசாமிகள் 5 பேர் வீட்டிற்குள் புகுந்து லட்சுமியைத் தாக்கி 15 பவுன் நகை மற்றும் ரூ.10,000 ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டுச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வரும் அக.,15-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. மாவட்ட அளவில் முதலிடம் பெறுவோர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.11) இரவு முதல் இன்று (அக்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3073
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
கடைசி நாள் :16.10.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு<

புதுகை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுநர் ஆகிய பணியிடங்களுக்கு போட்டி தேர்வு நடைபெற உள்ளது. அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 10 தேர்வு மையம், புதுகை கல்வி மாவட்டத்தில் 15 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6631 தேர்வு எழுத உள்ளனர் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.