Pudukkottai

News August 16, 2024

புதுக்கோட்டையில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

image

புதுக்கோட்டையில் நாளை காலை 8 மணிக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1 மணி நேரம் புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து படுகொலை செய்ததை கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

News August 16, 2024

விளையாட்டுப் போட்டிக்கான ஆலோசனைக் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட இளைஞர் நலன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு குழு, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளாக விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.

News August 16, 2024

மாநில இளைஞர் விருது: கலெக்டர் பாராட்டு

image

தமிழ்நாடு முதலமைச்சரால் 78வது சுதந்திர தினத்தன்று சமூக நல தன்னார்வலர் விருது கவின் பாரதிக்கு வழங்கப்பட்டது. இதில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதினை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா, இன்று நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றார். இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

News August 16, 2024

புதுகை மாவட்டத்தில் 572 துப்பாக்கிகள்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் விலங்குகளை விரட்டுவதற்கு உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையாளர்கள் ஆட்சியர் அலுவலக சி பிரிவு அலுவலகத்திற்கு பரிசோதனைக்காக எடுத்து வந்தனர். இந்த பரிசோதனை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும். புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 572 துப்பாக்கிகள் உரிமம் பெற்று வைத்துள்ளனர்.

News August 16, 2024

515 கணேசனுக்கு எளியோர் நண்பன் விருது

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த சமூக ஆர்வலரும் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் 515 கணேசன் என்பவருக்கு தனியார் தொலைக்காட்சி சார்பில் எளியோர் நண்பன் என்ற விருது வழங்கப்பட்டது. புதுக்கோட்டையை சேர்ந்த 515 கணேசன் என்பவர் அனாதை சடலங்களை தன்னுடைய சொந்த வாகனத்தில் எடுத்து அடக்கம் செய்து பல்வேறு சமூக சேவைகளை செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 16, 2024

புதுக்கோட்டை அருகே இளம்பெண் மர்ம மரணம்

image

கீரனூர் அருகே ஒள்ளத்துப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (38) – போதும்பொண்ணு (28) தம்பதி. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போதும்பொண்ணு வீட்டில் மயங்கி கிடந்ததாக தெரிகிறது. மயங்கி கிடந்தவரை அவரது பெற்றோர் வந்து எழுப்பிய போது, காதில் ரத்தம் வழிந்து, வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

News August 16, 2024

புதுக்கோட்டை கலெக்டர் வேதனை

image

புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் அருணா நேற்று கலந்து கொண்டாா். அப்போது, பேசிய அவர், “புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகளை கருவிலேயே அழிக்கும் செயல் அதிகமாக உள்ளது” என வேதனையுடன் தெரிவித்தார். மேலும், “இதுபோன்ற சட்டவிரோத செயல்களை யாரும் செய்ய வேண்டாம். பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் கல்வியை கொடுத்தால் உயர்வார்கள்” என்றார்.

News August 16, 2024

புதுகையில் 1 லட்சம் பரிசு அறிவிப்பு

image

வாராப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 10000, 5000, 2500 ரூபாய் பரிசுத் தொகை சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் சார்பில் வழங்கப்பட்டது. இனி வரும் காலங்களில் வாராப்பூர் ஊராட்சி பகுதியில் இருந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வு வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு ருபாய் 100000 வழங்குவேன் என்றார்.

News August 16, 2024

புதுகை சிப்காட் பகுதிகளில் மின்தடை

image

புதுகை சிப்காட் துணைமின் நிலையத்தில் நாளை (ஆக 17) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சிப்காட்நகர், தொழிற்பேட்டை, தாவூதுமில், சிட்கோ, வாகவாசல், வடவாளம், புத்தாம்பூர், செட்டியாப்பட்டி, பாலன்நகர், அபிராமிநகர், பெரியார்நகர், ராம்நகர், ஜீவாநகர், சிட்கோ (தஞ்சை சாலை) உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் எஸ்.கண்ணன் தெரிவித்துள்ளார்.

News August 16, 2024

புதுகையில் 1 லட்சம் பரிசு அறிவிப்பு

image

வாராப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 10000, 5000, 2500 ரூபாய் பரிசுத் தொகை சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் சார்பில் வழங்கப்பட்டது. இனி வரும் காலங்களில் வாராப்பூர் ஊராட்சி பகுதியில் இருந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வு வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு ருபாய் 100000 வழங்குவேன் என்றார்.

error: Content is protected !!