India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுகை மாவட்டத்தில் மாணவர்களின் உயர்கல்விகான கனவை நனைவாக்க முன்னோடி வங்கிகளுடன் சேர்ந்து பிப்.18ஆம் தேதி காலை 10 மணிக்கு மன்னர் கல்லூரி வளாகத்தில் மெகா கல்வி கடன் மேளா நடைபெற உள்ளது. இதில் கல்வி கடன் பெறுவதற்கான முழுமையான தகவல்கள் ஆலோசனை வழங்கப்படும். இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மஞ்சப்பை விருதுகளை சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்தார். அதன்படி பிளாஸ்டிக் இல்லாத முன் மாதிரியான பங்களிப்பை செய்த சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க மே மாதம் 1ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்தார்.

திருமயம் அருகே உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்ப்பதாக ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்த சண்முகம் (53) என்பவர் தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரிய வந்ததையடுத்து, அந்த கஞ்சா செடியை அழித்து, சண்முகத்தை கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். சென்னை மாவட்டத்தில் மட்டும் 33 <

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந் தேதி காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இந்த தகவலை விவசாய நண்பர்களுக்கு பகிருங்கள்…

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <

புதுகை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் தொழில் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகள் PM YASASVI திட்டத்தின் கீழ் தங்களது மேற்படிப்புக்காக கல்வி உதவித் தொகை பெறலாம். மேலும், கல்லூரியில் மூன்றாண்டு படித்தவர்கள், முதுகலை பாலிடெக்னிக் போன்றவற்றில் படிக்கும் மாணவ மாணவியர் இதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு கணித ஆசிரியராக பணிபுரியும் சுந்தர வடிவேலு (48) என்பவர் மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக சைடு லைனில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது திருப்பூர் கே.வி.ஆர் நகர் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தலை மறைவான அவரை திருப்பூர் தனிபடை போலீசார் புதுகையில் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

புதுகை, செப்பிளாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி ராஜ்குமார் (29) என்பவரை, ஜோயல் (21), கார்த்திக் (24), சிவா (24) ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கி, ஜோயல் ராஜ்குமாரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் ஜோயலை கைது செய்து, தலைமறைவாக இருந்த கார்த்திக் மற்றும் சிவா ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று கார்த்திக்கை கைது செய்தனர்.

புதுக்கோட்டை, திருப்புனவாசலை சேர்ந்த 11 பேர் சரக்கு மினி வேன் ஒன்றில் பழனிக்குச் சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது இவர்கள் சென்ற வாகனம் ராமநாதபுர மாவட்டம் திருவாடானை தாலுகா மங்கலக்குடி அருகே சென்றபோது சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியதில் 11 பேர் காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் காயமடைந்தவர்கள் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.