India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா வரும் மார்ச்.16ஆம் தேதி ஞாயிறு பூச்சொரிதல் விழாவும், மார்ச்.17ஆம் தேதி அக்னி காவடியும், மார்ச்.23ஆம் தேதி காப்புக்கட்டுதல் தொடங்கி மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சியும் ஏப்ரல் 6, 7, 8 ஆகிய மூன்று நாட்கள் பொங்கல் விழாவும், ஏப்ரல்.7 ஆம் தேதி நாடுவருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அம்மன் அருள் பெற SHARE பண்ணுங்க..
புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வரும் 18ஆம் தேதி மாலை 3:30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்திருக்கும் கூட்ட அரங்கில் நடைபெறும். எனவே, புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படை வீரர்கள் விதவையர்கள் படை வீரர்கள் சார்ந்தோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது குறைகள் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கலாம்.
கீரனூர் அடுத்த பொன்மாரி கல்லூரி அருகில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புள்ளிமான் அடிபட்டு இறந்துள்ளது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தண்ணீர் குடிப்பதற்காக அடிக்கடி வெளியே வரும்போது, வாகனங்கள் மோதி அடிபட்டு இறப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் காட்டுப்பகுதிக்குள் ஆங்காங்கே தண்ணீர் வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட அளவிலான வன்கொடுமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழக அரசு ஏழை, எளிய பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக 1820 கோடி நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்து, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் லியாகத் அலி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி முன்பாக பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகள் மூலமாக தயாரிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் விற்பனையில், 2016-2021 வரை பல கோடி ரூபாய் மோசடி மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முறைகேடு நடந்த நாட்களில் பணியாற்றிய 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த ஜனவரியில் வழக்குப்பதிவு செய்தது. இதில், புதுக்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா உட்பட 3 பேர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை வாசித்து வருகிறார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ரூ.1820 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும், புதுக்கோட்டையில் 200 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பூங்காக்கள் என அறிவித்துள்ளார். மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுக்கோட்டை மக்களே SHARE பண்ணுங்க..
அறந்தாங்கி, LNபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நலவாழ்வு மையத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்திற்கு 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விருப்பமுள்ளோர் மார்ச் 27ஆம் தேதிக்குள் மாவட்ட சுகாதார துறை அலுவலகம் சென்று விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும். நிரந்தரம் செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க…
ஏம்பல் அருகில் உள்ள விசூர் கண்மாயில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட சாய்குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் விசூர் ஸ்ரீ கருப்பசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அங்கு இருந்தவர் எப்படி ஏரியில் விழுந்தார் என்பது தெரியவில்லை. அவரது உடலை ஏம்பல் காவல் துறையினர் கைப்பற்றி தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
புதுக்கோட்டை மாவட்ட முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தின் தலைவராக 8 முறை சிறப்பான முறையில் செயலாற்றியவரும், தென்னிந்திய நடிகர் சங்கம்; தமிழ்நாடு இயல் – இசை – நாடக நடிகர் சங்கங்களின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றிய கலைமாமணி S.M.இசையரசன் இயற்கை எய்தினார். அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
Sorry, no posts matched your criteria.