Pondicherry

News March 27, 2025

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, தீர்மானம் நிறைவேற்றம்

image

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மாநில அந்தஸ்து தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சிவா, எம்எல்ஏ-க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், வைத்தியநாதன், நாக தியாகராஜன், நேரு(எ)குப்புசாமி ஆகியோர் கொண்டுவந்த தீர்மானம் அரசின் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே 15 முறை தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு கண்டுக்கொள்ளாத நிலையில் இன்று 16வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News March 27, 2025

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

image

தவளக்குப்பம் அபிஷேகபாக்கத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (42), தொழிலாளி. இவா் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், தவளக்குப்பம் போலீஸாா், சுரேஷை கைது செய்தனா். அவா் மீதான வழக்கு விசாரணை, புதுவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், சுரேஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தும், ரூ.10000 அபராதம் விதித்தும் நீதிபதி சுமதி உத்தரவிட்டாா்.

News March 26, 2025

காரைக்காலில் 2000 ஆண்டு பழமையான கோயில்!

image

காரைக்காலில் கைலாசநாதர் கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இங்குள்ள மூலவர் கைலாசநாதர், தாயார் செளந்தாராம்பாள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த கோயில் அம்மையார் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது. இக்கோயில் 8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் புனரமைக்கப்பட்டு மீண்டும் பிரெஞ்ச் ஆட்சி காலத்திலும் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயில் பற்றி உங்களுக்கு தெரிந்ததை கமெண்ட் செய்யவும்

News March 26, 2025

புதுவை கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்

image

புதுவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 10 சதவீத இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் முழுவதையும் அரசே செலுத்தி வருகிறது. மேலும் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என தெரிவித்தார்.

News March 26, 2025

அரசு பள்ளிகளில் சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும் – அமைச்சர்

image

சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுவையில் நீட் பயிற்சி பெற 585 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், புதுவை நகரப்பகுதியில் – 2, கிராமப்புறங்களில் – 2 , காரைக்காலில் – 1 என நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும். அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து மாணவர்கள் கல்வி திறன், ஆசிரியர்கள் திறன் அதிகரிக்கப்படும். அரசு பள்ளிகளில் மாலை நேர சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும், என்றார்.

News March 26, 2025

புதுவையில் முதலீட்டாளர்கள் மாநாடு – அமைச்சர் அறிவிப்பு

image

புதுவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் இந்தாண்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து விளக்குகளும் LED விளக்குகளாக மாற்றப்படும். மின்துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார்.

News March 26, 2025

புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு

image

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “புதுவையில் உள்ள புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் மற்றும் புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்” என தெரிவித்தார்.

News March 26, 2025

பொருளாதர குற்றம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர்

image

புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது எம்எல்ஏ பொருளாதாரம் மற்றும் சைபர் குற்றம் அதிகரித்து வருகின்றது என குற்றஞ்சாட்டினார். அதற்கு அமைச்சர் நமசிவாயம் அவர்கள் சிபிசிஐடி போலீசார் தற்போது பொருளாதார குற்றங்களை கண்டறிந்து வருகின்றது. பொருளாதர குற்றம் செய்வார்கள் கண்டறியப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

News March 26, 2025

மத்திய அரசிடம் சிறப்பு மானியம் கேட்கப்படும் – முதல்வர் ரங்கசாமி

image

புதுச்சேரி சட்டசபை கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதத்தில் நேற்று பேசிய முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வாழ்வாதார திட்ட பெயரில் ஆசிய வங்கியிடம் இரு கட்டமாக ரூ.4,750 கோடி கடனாக பெற அரசு சமர்ப்பித்த திட்ட முன்மொழிவு, மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. தற்போது அந்த தொகையை சிறப்பு மானியமாக விடுவிக்க மத்திய அரசிடம் கோரப்படும்.

News March 26, 2025

சிறந்த பல்கலையாக மாற்ற தேவையான நடவடிக்கை 

image

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதத்தில் பேசிய எம்எல்ஏ கல்யாணசுந்தரம் இன்ஜினியரிங் கல்லுாரி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது.ஆனால், 8ம் இடத்தில் இருந்த இக்கல்லுாரி இக்கல்லுாரி 238 238 தள்ளப்பட்டுள்ளது என்றார் என்றார். பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி வரும் காலத்தில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தினை சிறந்த பல்கலையாக மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்

error: Content is protected !!