India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி சட்டப்பேரவை நாளை புதன்கிழமை (பிப். 12) காலை 9.30 மணிக்கு கூடும் என பேரவைத் தலைவர் செல்வம் அறிவித்துள்ளார். இதில் மாநிலத்தின் கூடுதல் செலவினங்களுக்கு சபையின் முன் அனுமதி பெறுதல், சபை முன் வைக்கப்படும் ஆவணங்கள் இருப்பின் அவை வைக்கப்படுவதுடன், தணிக்கை அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படும். எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வு குழு முடிவு செய்ய உள்ளது.
புதுவை வணிக வரித்துறை கூடுதல் செயலாளர் முகமது மன்சூர் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுவை வணிக வரித் துறையில் காலியாக உள்ள 4 உதவி வணிக வரி அதிகாரி பணியிடங்கள் துறை ரீதியிலான போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளது. இந்த தேர்வை புதுவை அரசு துறைகளில் பணிபுரியும் பட்டப்படிப்பு முடித்த இளநிலை, மேல்நிலை எழுத்தர்கள், ஸ்டெனோ கிராபர்கள் எழுதலாம். விண்ணப்பங்களை துறை தலைவர்கள் மூலம் அனுப்ப வேண்டும்.
புதுவை காராமணிக்குப்பம் பகுதியில் செல்வராஜ் (71) என்பவர் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று (பிப்.09) காலை அவரது வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தபோது, செல்வராஜ் வீட்டிற்குள் சடலமாக கிடந்துள்ளார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறனர்.
புதுச்சேரிக்கு இன்று வருகை தந்த மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதனை ஆளுநர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது சட்டப்பேரவை தலைவர் செல்வம் மற்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி ஆகியோர் உடன் இருந்தனர்.
புதுச்சேரி வருகை தந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் 1,450 கோடி ஜிப்மருக்கு, 186 கோடி புதுச்சேரியின் குடிநீர் தேவைக்காக ஒதுக்கீடு. புதுச்சேரி, காரைக்கால், மாஹே ரயில்வே நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான பட்ஜெட் புதுச்சேரிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு எந்த நிதி நெருக்கடியும் இல்லை.தேவையான நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளது என்றார்.
புதுவை மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், புதுவை மீனவர்களுக்கு 2024-25-ஆம் நிதியாண்டில் கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம் மற்றும் இயந்திரமில்லா கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகின்றன. மீனவா்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் காலக்கெடு பிப்ரவரி 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.
வள்ளலார் ஜோதி தினமான வரும் 11ம் தேதி இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வள்ளலார் ஜோதி தினமான வரும் 11ம் தேதி, அரியாங்குப்பம் பகுதியில் உள்ள அனைத்து ஆடு, மாடு, கோழி, மீன் இறைச்சி கடைகள் மூட வேண்டும். மீறி கடை திறந்திருந்தால், அபராதம் விதிப்பதுடன் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
காரைக்கால் மீனவர்கள் கைது சம்பவம், பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டுள்ளதை கண்டித்து சட்டமன்றம் அருகே முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி முன்னாள் முதல்வர் உள்ளிட்ட காங் கட்சியினரை கைது செய்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை அருகே மத்திய மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி முழுமையாக வஞ்சிக்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி பாராட்டி பேசுகிறார், நாற்காலி மட்டுமே முக்கியம், நாற்காலிக்காக கட்சியை கூட கலைப்பார் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
புதுச்சேரி ஆதி திராவிட மற்றும் பழங்குடி இனத்தவருக்கான தேசிய வாழ்வாதார சேவை மைய துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர் சாமி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரியில் எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற (பிப்.14) ஆம் தேதி தொடங்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.