India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் ராஜீவ் காந்தி சதுக்கம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரை மேம்பாலம் சம்பந்தமாக மத்திய அமைச்சர் அவர்கள் புதுச்சேரி முதல்வர் அவர்களுக்கு எழுதிய கடிதம் எழுதி கோரிக்கை வைத்தார் அந்நிலையில் மத்திய அரசு மேம்பாலம் கட்டுவதற்கும் மற்றும் பாண்டியிலிருந்து கடலூர் வரை உள்ள 20கிமீ ரோட்டை அகலப்படுத்தவதற்கும் சேர்ந்து 1000 கோடி ரூபாய் செலவில் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
புதுச்சேரி மணவெளி தொகுதிக்குட்பட்ட தவளக்குப்பம் தானாம்பாளையம் தனியார் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சமூக வலைதளங்களில் தவறான தகவல் வெளியிட்டதாக, பிரபல யூ-டியூபர் கார்த்திக் பிள்ளை என்பவரை புதுச்சேரி போலீசார் இன்று அதிகாலை சென்னையில் வைத்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி நிதித்துறை சார்பு செயலர் ரத்தினகோஸ் கிஷோர் சாரி நேற்று வெளியிட்டுள்ள சரி குறிப்பில் எட்டாவது பொருளாதாரப் புள்ளிவிவர கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது இதற்கு புதுச்சேரி அரசு தயாராகி வருகிறது இந்த கணக்கெடுப்பின்போது ஏற்படும் நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை தீர்க்க கண்காணிக்கவும் தலைமைச் செயலர் தலைமையில் மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்
புதுச்சேரி அஞ்சல் கோட்டம் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கமால் பாஷா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள பகுதியில் பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் இன்று 21ம் தேதி, வரும் 28 ம்தேதி மற்றும் மார்ச் 10 ஆகிய மூன்று நாட்களுக்கு செல்வமகள் சேமிப்பு கணக்குகளைத் துவங்குவதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
புதுவை சுகாதாரத்துறையில் சமீபத்தில் நர்சிங் அதிகாரி (நர்சுகள்) பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அந்த தேர்வில் வெற்றிபெற்ற சிலர் பணியில் சேரவில்லை. இதைத்தொடர்ந்து அந்த காலியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 28-ந்தேதி நடக்கிறது.
புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்பி நாரா சைதன்யா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டிங் வர்த்தக தளத்தின் மூலம் முதலீடு உட்பட பல்வேறு வழிகளில் வற்புறுத்தி பணத்தை முதலீடு செய்ய தூண்டுகின்றனர். எந்தவொரு தளத்திலும் முதலீடு செய்வதற்கு முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த முன்னறிவும் இல்லாமல் எந்த ஆன்லைன் பங்கு வர்த்தக தளத்திலும் பணம் முதலீடு செய்ய வேண்டாம் என்றார்.
பிள்ளைச்சாவடி கடற்கரையில் வைத்திருந்த மீன்பிடி வலை, மர்ம நபர்களால் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டது. பிள்ளைச்சாவடி பகுதியை சேர்ந்த மீனவர்கள் சித்திரவேல், ராகவன், கோகுல், கார்த்தி ஆகியோர்களின் நான்கு வலைகளுக்கு நேற்று மதியம் மர்ம நபர்கள் தீவைத்து எரித்துள்ளனர். இதில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான 4 வலைகளும் முழுதுமாக எரிந்துள்ளன. குறித்து காலாப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி பல்கலைகழக வடகிழக்கு மாநில மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வடகிழக்கு மாநில கலாச்சார விழா 2025 பல்கலைக்கழக கருத்தரங்கம் மற்றும் கலாச்சார மையத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலாச்சார விழாவை தொடக்கி வைத்தார். அங்கு வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சார வரலாற்று அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அரசு, நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களுக்கு இறுதிக்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வரும் 22ம் தேதிக்குள் தங்களது விருப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
புதுச்சேரி பிராந்தியம் மாஹேவில் உள்ள கூட்டுறவு கல்லூரியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தை இன்று முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக தலைமை தாங்கி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டபேரவை தலைவர் செல்வம் , துணை சபாநாயகர் ராஜவேலு , சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.