Pondicherry

News April 9, 2025

பள்ளி அருகே புகையிலைப் பொருள் விற்ற பெண் கைது

image

புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோலை நகர் மெயின் ரோட்டில் உள்ள சின்னாத்தா அரசு பள்ளி அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற காயத்ரி என்பவரை முத்தியால்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.1000 மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News April 9, 2025

புதுச்சேரி அதிகாரிகள் 4 பேருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து

image

மத்திய அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, அறிவியல் தொழில்நுட்பத்துறை இயக்குனர் யாசம் லக்க்ஷ்மிநாராயண ரெட்டி, வணிக வரித்துறை ஆணையர் முகமது மன்சூர், தொழில்துறை இயக்குனர் ருத்ரகௌடு ஆகிய 4 அதிகாரிகள் பதவி மூப்பின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்

News April 8, 2025

அதிகாரிகளுடன் சபாநாயகர் ஆலோசனை

image

மணவெளி தொகுதியில், பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. மணவெளி சட்டமன்ற தொகுதியில் ரூ.51.56 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடர்பாக அதிகாரிகள் எடுத்துக் கூறினர். அதற்கான பணிகளை விரைந்து முடிக்க சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டார்.

News April 8, 2025

புதுச்சேரி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு எண்கள்

image

புதுச்சேரி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரசு உதவி எண்கள். குடிமக்கள் குறை தீர் மையம் -1077, குழந்தைகள் உதவி எண் -1098, பெண்கள் உதவி எண் – 1091, குற்றங்களை தடுப்பவர் – 1090, மீட்பு மற்றும் நிவாரண ஆணையர் -1070, சாலை விபத்து – 1073, அவசர ஊர்தி – 102,108, தீயணைப்பு – 101, காவல் கட்டுப்பாட்டு அறை – 100. இந்த எண்களை SHARE செய்து பிறருக்கும் தெரியபடுத்தவும்.

News April 8, 2025

புதுச்சேரியில் மதுக்கடைகள் இயங்காது

image

புதுச்சேரி கலால்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் ஏப்ரல் 10ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று மஹாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் ஏப்ரல் 10ஆம் தேதி சாராயம் கள் உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும் இயங்க கூடாது என கலால் துறை ஆணையர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2025

புதுவை: பட்டப் பகலில் வீட்டில் கொள்ளை

image

புதுச்சேரி, திருபுவனை கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்தவர் அருள்மொழி. இவர் வழக்கம்போல் காலை வேலைக்கு சென்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.2.25 லட்சம் பணம் மற்றும் 1 சவரன் தங்க செயின் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அருள்மொழி அளித்த புகாரின்படி திருபுவனை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 8, 2025

புதுவை: மூன்று நாட்களுக்கு ஜிப்மர் மருத்துவமனை இயங்காது

image

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு விடுமுறை தினங்களான 10ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி, 14ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் 18ஆம் தேதி ஆகிய மூன்று நாட்களில் ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என்று  ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 7, 2025

புதுச்சேரி ஜிப்மர் 3 நாட்கள் இயங்காது

image

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு விடுமுறை தினங்களான ஏப்ரல் 10 – மகாவீரர் ஜெயந்தி, ஏப்ரல் 14 – டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள், ஏப்ரல் 18 ஆகிய மூன்று நாட்களில் ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என்று மருத்துவனை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

News April 7, 2025

காரைக்காலில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்.7) காலை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்தது. இதன் காரணமாக நாளை (ஏப்.8) காரைக்கால் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News April 7, 2025

புதுவை: ஆன்லைனில் ரூ.49,000 இழந்த நபர்

image

புதுச்சேரி, சின்னக்கடையை சேர்ந்தவர் வசந்த ராஜன். இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பி வசந்தராஜன் ரூ.49,000 முதலீடு செய்து ஏமாந்ததுள்ளார். பின் அவர் நேற்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதுபோன்ற போலி அழைப்புகளை பொதுமக்கள் நம்பவேண்டாமென காவல்துறை எச்சரித்துள்ளனர்.

error: Content is protected !!