Pondicherry

News March 8, 2025

பயிர் காப்பீடு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு

image

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை கூடுதல் வேளாண் இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விவசாயிகள் தற்போது சாகுபடி செய்துள்ள நெல், கரும்பு மற்றும் வாழை சாகுபடி பிரதம மந்திரியின் பயிர் காப்பு திட்டத்தில் காப்பீடு செய்து பயனடையலாம் விவசாயிகள் அடுத்த மாதம் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

News March 8, 2025

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை சினிமா ஊழியருக்கு 20 ஆண்டு சிறை

image

புதுச்சேரி கண்டாக்டர் தோட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். சினிமா வெளிப்புற படப்பிடிப்பு ஊழியர். இவர், 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி சென்னைக்கு அழைத்து சென்றார். தாம்பரத்தில் வீடு எடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, குற்றவாளி கார்த்திக்கிற்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

News March 7, 2025

செய்தி மற்றும் விளம்பரத்துறையை கண்டித்தும் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

image

காரைக்கால் மாவட்டத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க வலியுறுத்தியும் காரைக்கால் மாவட்ட செய்தியாளர்களுக்கு பல ஆண்டுகளாக அரசு அடையாள அட்டை வழங்காமல் உள்ள புதுச்சேரி மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறையை கண்டித்தும் செய்தியாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News March 7, 2025

புதுவை : 6-மாதத்தில் தற்போதைய ஆட்சி முடிவுக்கு வரும்

image

புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ரங்கசாமி நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள வாய் முடிக்கொண்டு டம்மி அரசாங்கம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என முதல்வர் தெரிவிக்கிறார். ஆளத் திறமை இல்லாமல் அதிகாரியை குறை சொல்கிறார். அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி புதுவை போராட்ட களமாக மாறி உள்ளதும், என்று கூறினார்.

News March 7, 2025

போலீஸ் புகார்கள் ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

புதுவை உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி மாநிலத்தில் போலீஸ் புகார்கள் ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஓய்வு பெற்ற ஹைகோர்ட் மாவட்ட கோர்ட் நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம். பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். விண்ணப்பத்தினை www.py.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

News March 7, 2025

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் சிறப்புக்கள்!!

image

புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று. இத்திருத்தலத்தின் மேல் பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்ததாகவும் ஆகவே அக்குளத்திற்கு மணற்குளம் என்று பெயர் வந்தது. கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இந்த கோயில் மட்டுமே. உற்சவர் வில்புருவமும் மூன்று பதமாகவும் நிற்கிறார். ஷேர் செய்யவும்

News March 7, 2025

புதுச்சேரி காரைக்காலில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

image

புதுவை மாநில சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினரும், புதுச்சேரி மாவட்ட நீதிபதியுமான அம்பிகா நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தேசிய சட்டப்பணிகள் ஆணைய உத்தரவுப்படியும், சென்னை உயர்நீதிமன்றம், புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய வழிகாட்டுதலின் படியும் மாா்ச் 8-ஆம் தேதி காலை 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. புதுச்சேரி காரைக்காலில் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் என தெரிவித்தார்.

News March 6, 2025

பங்கு சந்தையில் கணக்கு -14.65 லட்சம் மோசடி

image

புதுவையை சேர்ந்தவர் சோஹாக் பட்டேல். இவரை மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் உள்ள குரூப்பில் இணைத்துள்ளார். அதில் பங்குசந்தையில் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதனை நம்பி சோஹாக், அந்த குரூப்பில் இருந்த லிங்க் மூலம் பங்கு சந்தையில் கணக்கு தொடங்கி பல்வேறு தவணைகளில் 14.65 லட்சத்தை முதலீடு செய்து ஏமாந்தார் ஏமாந்தார். இன்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

News March 6, 2025

சட்டசபையில் தலைமை செயலாளர் புதிய உத்தரவு

image

புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. 12ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சட்டசபை நிகழ்வு குறித்து தலைமைச் செயலாளர் சரத் சவுகான் இன்று அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் சட்டசபைக்கு வரும் போது செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வேண்டும், என தெரிவித்திருந்தார்.

News March 6, 2025

வியாபாரம் செழிக்க ஒரு முறை இந்த கோயிலுக்கு போயிட்டு வாங்க!

image

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே அய்யன்பேட்டையில் ஸ்ரீ படி அளந்தநாயகி சமேத செட்டியப்பர் கோயில் உள்ளது. சிவபெருமான் தராசு பிடித்தும், பார்வதி தேவி அளவை படியை ஏந்தியும் வியாபாரம் செய்யும் கோலத்தில் காட்சியளிக்கும் இந்த கோயிலுக்கு வியாபாரிகள் ஒரு முறை சென்று தரிசித்தால் தங்களது வியாபாரம் பெருகும், நஷ்டம் தீரும் கடன்கள் அடையும் என்பது ஐதீகம்.. வியாபார நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

error: Content is protected !!