Pondicherry

News September 14, 2024

சீதாராம் யெச்சூரி மறைவு-புதுச்சேரி ஆளுநர் இரங்கல்

image

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் குனியில் கைலாசநாதன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் மூத்த அரசியல்வாதியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்திய அரசியலில் பன்முகத்தன்மை வாய்ந்த ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்ந்தவர். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்று தெரிவித்தார்.

News September 13, 2024

ஓணம் பண்டிகை – புதுச்சேரி கவர்னர் வாழ்த்து

image

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் இன்று வெளியிட்டுள்ள ஓணம் திருநாள் வாழ்த்து செய்தியில்,
மொழி மற்றும் கலாச்சார அடையாளங்களோடு நாம் பாரத தேசத்தின் ஒற்றுமையை முன்னிறுத்தி வளர்ச்சி பெறுவோம்.
இந்த ஓணம் திருநாள் ஆண்டு முழுவதும் அனைவரது வாழ்விலும் மிகுந்த மகிழ்ச்சியையும் செழிப்பையும் அளிக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

News September 13, 2024

திருவிழாக்கள் நம் உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடியவை: முதல்வர்

image

மலையாள மொழி பேசும் மக்களால் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படும் ஓணம் போன்ற பண்டிகைகள், கலாச்சார உறவுகளை மீண்டும் புதுப்பிக்க உறவினர்களுக்கிடேயே ஆரோக்கியமான உறவுகளை வளர்க்கவும் உதவுகின்றன. ஓணம் அத்தப்பூ கோலத்தின் அழகிய நறுமணம் அனைவரது வாழ்விலும் ஒற்றுமையின் மகிழ்ச்சியையும், குடும்பத்தின் அரவணைப்பையும், செழிப்பின் மிகுதியையும் தரட்டும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News September 13, 2024

புதுவை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

image

புதுச்சேரி திமுக மற்றும் தொமுச பேரவை சார்பில், புதுச்சேரி என்ஆர் காங்-பாஜக கூட்டணி அரசையும், தொழிலாளர் துறையையும் கண்டித்து, தொழிலாளர் துறை வளாகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார்.

News September 13, 2024

எம்.டி., எம்.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

புதுசேரி சென்டாக் மூலம், எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் கவுன்சிலிங் நடத்தி வருகிறது. இந்நிலையில் எம்.டி., எம்.எஸ்., முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீண்ட காலமாக கவுன்சிலிங் நடத்தாமல் இருந்தது. அதனை அடுத்து, இந்த படிப்புகளுக்கு 2024 -25ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களை சென்டாக் நேற்று அறிவித்துள்ளது.

News September 13, 2024

பொறியியல் படிப்புகளுக்கு இறுதிகட்ட கலந்தாய்வு

image

புதுவையில் அரசு மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள அரசு, சுயநிதி இடங்களின் விவரம் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காலியிடங்களை நிரப்ப மாப் அப் கலந்தாய்வு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜா் மணிமண்டபம், காரைக்காலில் காமராஜா் பொறியியல் கல்லூரி, மாஹே, ஏனாமில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் கலந்தாய்வுகள் நடைபெறுகிறது.

News September 13, 2024

புதுவை முதலமைச்சரின் இரங்கல் செய்தி

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மா.கம்யூ., தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவிற்கு, இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய அரசியலில் மிகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்த சீத்தாராம் யெச்சூரி, தனது வாழ்நாள் முழுதும் பொதுவுடைமை சித்தாந்தங்களை கடைப்பிடித்து, அதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.

News September 13, 2024

புதுச்சேரியில் பொதுமக்கள் குறைதீா் முகாம்

image

புதுவை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் உத்தரவின் படி, புதுச்சேரியில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, செப்.15ஆம் தேதி விடுமுறை நாளாக இருப்பதால் வரும் செப்.16ஆம் தேதி காலை 10 மணிக்கு வழுதாவூர் சாலையிலுள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் தரைத் தளத்தில் பொதுமக்கள் குறை தீா் முகாம் நடைபெறவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News September 13, 2024

புதுச்சேரியில் மது கடைகளை மூட உத்தரவு

image

புதுச்சேரியில் வருகின்ற செப்டம்பர்.17ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று இஸ்லாமிய பண்டிகையான மிலாது நபியை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு முன்னிட்டு, புதுச்சேரியில் அனைத்து விதமான மதுக்கடைகளையும், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூட புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

News September 13, 2024

புதுச்சேரி நீதிமன்றங்களில் நாளை லோக் அதாலத்

image

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் கோர்ட்டுகளில் நாளை லோக் அதாலத் நடக்க உள்ளதாக, மாவட்ட நீதிபதி அம்பிகா நேற்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் பொழுது புதுச்சேரி கோர்ட், காரைக்கால் மாவட்ட கோர்ட் மற்றும் ஏனாம் கோர்ட் வளாகத்தில், நாளை காலை 10:00 மணிக்கு நடக்கும் லோக் அதாலத்தில், நிலுவையில் உள்ள மற்றும் நேரடி வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளது.