Pondicherry

News September 15, 2024

பொறியாளர்கள் தினம்: முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், எதிர்காலத்தை உருவாக்க புதுப்புது தொழில்நுட்பங்களைக் கொண்டு வரும் பொறியாளர்கள் சமுதாயத்தின் முதுகெலும்பு போன்றவர்கள். அவர்களின் படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகளைப் வரவேற்பதும் அங்கீகரிப்பதும் நமது கடமையாகும். இந்நாளில் பொறியாளர்கள் அனைவருக்கும் பொறியாளர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் அகம் மகிழ்கிறேன் என கூறியுள்ளார்.

News September 15, 2024

புதுச்சேரி அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

image

வேண்டியவர்களுக்கு புறவாசல் வழியாக பணி நியமனம் அளித்து, வாக்களித்த மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள்? ஏமாற்றுகிறீர்கள்?. 16 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரி அரசுக்கு, நியாயமான தேர்வை நடத்த முடியாதா என்று சட்ட விரோதமாக பணி நியமனங்கள் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

News September 14, 2024

புதுச்சேரியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 857 வழக்குகளுக்கு தீர்வு

image

புதுச்சேரி மாநில நீதிமன்றங்களில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நிலுவையில் உள்ள வழக்குகளும் நேரடி வழக்குகளும் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. மொத்தம் 21 அமர்வுகளில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 6305 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 857 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

News September 14, 2024

புதுச்சேரியில் 1464 மாணவர்கள் தேர்வு

image

புதுச்சேரியை பூர்வீமாக கொண்டு முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி பட்டியலை சுகாதார துறை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 1464 மாணவர்களது பெயர்கள், அவர்கள் எடுத்த மதிப்பெண்ணுடன் இடம் பெற்றுள்ளது. பொது பிரிவினை சேர்ந்த மாணவி தர்ஷினி 99.99 சதவீத மதிப்பெண்ணுடன் புதுச்சேரி மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

News September 14, 2024

பந்த் போராட்டம் தேவையற்றது: அமைச்சர் பேட்டி

image

புதுவை சட்டப்பேரவையில் நேற்று பேட்டியளித்த அமைச்சர் லட்சுமி நாராயணன், கடந்த 2009ஆம் ஆண்டு மின் துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் படியே, ஆண்டுதோறும் மின் கட்டணம் உயா்த்தப்படுகிறது. புதுவை அரசு மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே மின்சார மானியம் அறிவித்துள்ளது. எனவே, அரசியல் காழ்ப்புணா்ச்சியால் இந்தியா கூட்டணியினர் போராட்டத்தை அறிவித்திருப்பது தேவையற்றது என்று தெரிவித்தார்.

News September 14, 2024

புதுவையில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

image

தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒன்பது துறைமுகங்களில் நேற்று இரவு ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அமைந்துள்ள துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனை அடுத்து மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 14, 2024

இந்திரா சிக்னல்கள் வழியாக மேம்பாலம்: அமைச்சர்

image

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பொது பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ராஜிவ், இந்திரா சிக்னல் வரை மேம்பாலம் தேவையா என மத்திய அரசு அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ராஜிவ், இந்திரா சிக்னல் வழியாக செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அறிக்கை சமர்ப்பித்து, மேம்பாலம் கட்ட ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு ஓரிரு மாதத்தில் வந்து விடும் என்றார்.

News September 14, 2024

புதுச்சேரி ஊர்க்காவல்படை வீரர்களுக்கு சம்பள உயர்வு

image

புதுச்சேரியில் தற்போது ஊர்காவல்படை வீரருக்கு தினசரி வழங்கப்படும் சம்பளம் ரூ.1056ல் இருந்து ரூ.1085 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக 29 ரூபாய் ஏற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை கவர்னரின் உத்தரவின்படி உள்துறை செயலர் ஷிரன் நேற்று பிறப்பித்துள்ளார். இந்த சம்பள உயர்வு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக உள்துறை தெரிவித்துள்ளது

News September 14, 2024

புதுச்சேரியில் சிறுமி வன்கொடுமை: 2 பேர் கைது

image

சோரப்பட்டை சேர்ந்த அபேத் தனியார் கம்பெனி ஊழியர். இவர் உறவினர் வீட்டில் தங்கி அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் 13வயது சிறுமியை, கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன் (எ) அசோக் என்பவரும் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் போக்சோ சட்டத்தில் இருவரையும் கைது நேற்று செய்தனர்.

News September 14, 2024

புதுவை மீனவர்களுக்கு கட்டுப்பாடு

image

புதுவை மீன்வளத்துறை இயக்குனர் இஸ்மாயில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவையில் கருக்குவலை பயன்படுத்தி மீன்பிடிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீனவர்களின் வலைகள், படகுகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது. எனவே உச்சநீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு மீனவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.