India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவையில் வாக்காளர் சுருக்கு முறை திருத்த பணி நவ. 9,10 ஆகிய 2 நாளில் அனைத்து ஓட்டு சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. பெயர் சேர்க்க மாநிலம் முழுவதும் 2023 பேர் விண்ணப்பித்துள்ளனர். நீக்கம் செய்ய 5,465 பேர் முகவரி மாறுதலுக்கு 8,067 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் நேற்று தெரிவித்தார். மேலும் வரும் 23 ,24 ஆம் தேதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என்றார்.
புதுச்சேரி அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்டாக் எம்பிபிஎஸ், சேர்க்கை என்ஆர்ஐ ஒதுக்கீடு இடங்களுக்கு போலி ஆவணம் சமர்ப்பித்த 49 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். என்ஆர்ஐ, ஒதுக்கீடு மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
புதுவையில் வருகிற 15-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் அரசுத் துறைகளின் ஆயத்தப் பணி குறித்து பல பகுதிகளில் கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு நடத்தினார். மேலும் அவசரகால செயல் மையத்துக்கு சென்றும் ஆய்வு செய்தார் தொடர் மழையை எதிர்கொள்ள அவசர கால செயல் மையத்தின் கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்களான 112, 1077 தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம்.
காரைக்கால் கடற்கரைக்கு உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பல ஊர்களில் இருந்து வருகின்றனர்.கடற்கறை ஓரம் நீண்ட நாட்களாக கிடக்கும் குப்பை அகற்றப்படாமல் உள்ளது. காரைக்காலில் உள்ள சுற்றுலா தலங்களில் கடற்கரை ஒன்றாகும். அதை சுத்தம் செய்ய நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சேரி முதலியார் பேட்டை AFT அருகே இரயில்வே மேம்பால பணிகள் வரும் 15ம் தேதி முதல் தொடங்கவிருப்பதால் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்தது கடலூர் செல்லும் வாகனங்கள்
புவன்கரே வீதி (நெல்லித்தோப்பு மார்க்கெட் இடது புறமாக) வழியாக
முதலியார்பேட்டை பெட்ரோல் பங்க் இடதுபுறம் திரும்பி
AFT ஆலை வீதி வழியாக கடலூர் சாலையை அடைய வேண்டும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்
புதுவை கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பணி தேர்வு, வரும் டிச. 15ஆம் தேதி 4 பிராந்தியங்களிலும் நடக்கிறது. திட்டத்துறை ஆராய்ச்சியாளர் பணிக்கு டிசம்பர் 29ஆம் தேதி காலையிலும், அன்று மதியம் தீயணைப்பு நிலைய அதிகாரி பணி தேர்வும் புதுவையில் மட்டும் நடக்கிறது. இதில் இளநிலை ஆய்வாளர் பணிக்கு 7,000 பேரும், ஆராய்ச்சியாளர் பணிக்கு 4,000 பேரும், தீயணைப்பு நிலைய அதிகாரி பணிக்கு 4,600 பேரும் விண்ணப்பித்துள்ளனர்
புதுவை அரியாங்குப்பம், சீனிவாசா அப்பார்ட்மென்ட் சுந்தர் மனைவி அனிதா, அக்கவுண்டண்ட். இவரது வீட்டில், அலமாரியில், வைத்திருந்த 4.5 சவரன் நகைகள், சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வீட்டில், வேலை செய்த, பாகூர் வள்ளியிடம் விசாரித்ததில் அவர் அடகு கடையில் வைத்தது தெரிய வந்தது. நகையை மீட்டு வள்ளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுவை கூடுதல் வேளாண் இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் தட்டான்சாவடியில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் வாயிலாக வேலையில்லா விவசாய பட்டதாரிகள் மற்றும் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்களை வருகிற முப்பதாம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி கலைபண்பாட்டுத்துறையில் 2023 ஆம் ஆண்டுக்கான கம்பன் புகழ் இலக்கிய விருது, நேரு குழந்தைகள் இலக்கிய விருது, தொல்காப்பியர் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக எழுத்தாளர்களிடமிருந்து கலை பண்பாட்டுத்துறையில் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது https://art.py.gov.in/ என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.