India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் தே.ஜ. கூட்டணியின் பாஜக வேட்பாளராக நமச்சிவாயம் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் பாஜக நேற்று 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய கூட்டணி கட்சி சார்பில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மீண்டும் வைத்தியலிங்கம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது எம்.பியாக உள்ளார். இதனை அடுத்து காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ஒரு கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட போலீசார், மதன், கௌதம், சரண், பிரேம்குமார், லோகேஷ், கார்த்திக் உட்பட 7 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காரைக்காலில் இன்று இந்தியா கூட்டணி கட்சி சார்பில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், திமுக எம்.எல்.ஏ நாஜிம், காங்கிரஸ் முன்னால் தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் உள்ளிடோர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மணிகண்டனை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் பணியில் ஆளுங்கட்சியினருக்கு காவல்துறை ஆதரவாக செயல்படுவதாக புகார் மனு அளித்தனர்.
புதுச்சேரியில் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரிக்கு வந்தபோது கொடுத்த தேர்தல் வாக்குறுதி ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. புதுச்சேரியில் ரெஸ்டோபார்வை திறந்து விட்டு கஞ்சா மாநிலமாக ஆக்கிவிட்டார்கள். இதுதான் அவருடைய சாதனை என்று விமர்சனம் செய்தார்.
புதுவையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தலை உறுதி செய்யவும், தேர்தல் நடத்தை விதி மீறல்களை கண்காணிக்கவும், புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரியால் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமை வகித்தார்.
புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய அரசின் விடுமுறை தினமான 25ஆம் தேதி திங்கட்கிழமை ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு (ஓபிடி ) இயங்காது. எனவே அன்றைய தினம் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை நோயாளிகள் தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனால் புதுவை சட்டப்பேரவைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பேரவைக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டபேரவை ஊழியர்கள் அடையாள அட்டை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். தேர்தல் முடியும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என சட்டப்பேரவை அலுவலகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக தமிழ்வேந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று(21.3.24) முதல் (23.3.24) வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.