Pondicherry

News November 16, 2024

9 அரசு பள்ளிகளில் என்.சி.சி., அங்கீகாரம் ரத்து

image

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ நேரு நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி அரசு பள்ளிகளில் இயங்கி வந்த என்.சி.சி சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவு பயிற்சியாளர்கள் இல்லாததால் என்.சி.சி. பாட பிரிவு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது தற்போது நாவலர் நெடுஞ்செழியன், தொண்டமாநத்தம் பள்ளியில் மட்டுமே இயங்கி வருகிறது. மீதமுள்ள 9 பள்ளிகளில் என்.சி.சி.,ஜூனியர் பிரிவு ரத்தாகி உள்ளது என்றார்

News November 16, 2024

புதுவை கலெக்டர் எச்சரிக்கை

image

புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் நேற்று கூறியதாவது, “சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கனவே போதிய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிகொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் அகற்றவில்லை. இதனால் இடித்து அகற்றி வருகிறோம். மீண்டும் சாலைகளை ஆக்கிரமித்தால் முதலில் அபராதம், அடுத்து வழக்கும் பதிவு செய்யப்படும்” என எச்சரித்தார்.

News November 15, 2024

புதுச்சேரி காரைக்கால் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

image

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ.15) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்திலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 15, 2024

புதுவையில் உள்துறை அமைச்சர் ஆலோசனை

image

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு காவல் துறை சம்பந்தமான ஆலோசனை கூட்டம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் தலைமையில் இன்று சட்டமன்றம் அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி டிஜிபி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் செயலர் கேசவன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

News November 15, 2024

ஐநா உலக நீர் தர ஆலோசனைக்குழு 

image

ஐக்கிய நாடுகள் சபையின் உலக நீர் தர கூட்டணியின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக புதுச்சேரி பல்கலை., பேராசிரியர் நந்திவர்மன் முத்து நியமிக்கப்பட்டுள்ளார். அந்தக் குழுவில் ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா,லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா,லத்தீன் அமெரிக்கா, பசிபிக் நாடுகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்களுடன் இவர் இடம்பெற்றுள்ளார்.இவரது நியமனம் புதுச்சேரிக்கு பெருமை என துணை வேந்தர் தணிக்கரசு தெரிவித்துள்ளார்.

News November 15, 2024

புதுச்சேரியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

image

புதுச்சேரி முதலியார் பேட்டை AFT அருகே இரயில்வே மேம்பால பணிகள் இன்று முதல் தொடங்கவிருப்பதால் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்தது கடலூர் செல்லும் வாகனங்கள்
புவன்கரே வீதி (நெல்லித்தோப்பு மார்க்கெட் இடது புறமாக) வழியாக
முதலியார்பேட்டை பெட்ரோல் பங்க் இடதுபுறம் திரும்பி
AFT ஆலை வீதி வழியாக கடலூர் சாலையை அடைய வேண்டும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்

News November 15, 2024

காரைக்கால்: ஆட்சியகரத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

image

புதுச்சேரி ஆளுநர் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் காரைக்கால் மாவட்டத்தில் வரும் இன்று வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆட்சியர் வளாகத்தில் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறும் என்று காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 15, 2024

அலையில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

image

அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் கபூர். இவர் நேற்று மதியம் நண்பர்களோடு கடலில் இறங்கி குளித்தனர். அப்பொழுது திடீரென எழுந்து வந்த ராட்சத அலை ஒன்று அவர்களை வாரி சுருட்டியது. இதில் நண்பர்கள் தப்பித்து கரை திரும்பிய நிலையில் அப்துல் கபூரை காணவில்லை. தகவலறிந்த போலீசார் மீனவர்களுடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அப்துல் கபூர் பாறை இடுக்கிலிருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

News November 14, 2024

அரசு ஊழியரிடம் ரூ.74 லட்சம் ஆன்லைன் மோசடி

image

புதுவை தட்டாஞ்சாவடி ஜெயின் தெரசா தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன், புதுவை சமூக நலத்துறை ஊழியர் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில் ஆன்லைன் வர்த்தகத்தின் முதலீடு செய்து வீட்டில் இருந்து அதிகம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை உண்மை என நம்பிய கார்த்திகேயன் பல்வேறு தவணைகளாக 74,86,683 முதலீடு செய்தார் மீண்டும் பணத்தை எடுக்க முடியவில்லை அவர் சைபர் கிரைம் போலீசில் நேற்று புகாரளித்தார்

News November 14, 2024

காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் மனிதாபிமானம்

image

காரைக்கால் பேருந்து நிலைய ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர் பெண்கள், தங்களது பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் செல்ல வாகன வசதி வேண்டும் என்று தெரிவித்தனர். உடனே அருகில் இருந்த ஆட்டோ சங்க நிர்வாகியை அழைத்த கலெக்டர், குழந்தைகளை தினமும் பள்ளிக்கு அழைத்து செல்ல வேண்டும், அவர்கள் கொடுக்கும் தொகை போக மீதி தொகையை நான் தருகிறேன் என்று கூறினார. அவரது செயலை பாராட்டினார்.