Pondicherry

News October 10, 2024

புதுவையில் 7 பேர் கைது

image

புதுவை கோரிமேடு வாகன முனையம் அருகே ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக கோரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கோரிமேடு உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர். அங்கு பதுங்கி இருந்த 7 நபர்களை விசாரித்த போது, பிரசாத் ராம், அஜித்குமார், புண்ணியமூர்த்தி, அருண்குமார், விக்கி, அரவிந்த் என்பது தெரிய வந்தது விசாரணையில் கொள்ளையடிக்க இருப்பது தெரியவந்தது.

News October 10, 2024

புதுச்சேரி பிஆர்டிசி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்களின் நலனுக்காக புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் புதுச்சேரியில் – பெங்களுரு(ரூ. 600, இரவு 10.30) செல்ல 13.10.2024, புதுச்சேரி- மாஹே(ரூ.750- நேரம் மாலை 6) செல்ல 30.10.2024 மற்றும் மாஹே-புதுச்சேரிக்கு (ரூ. 750- நேரம் மதியம் 2.30) 3.11.2024 அன்று சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.

News October 9, 2024

புதுச்சேரியில் காவல் துறை அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

image

புதுச்சேரி மாநில காவல்துறையில் உதவி ஆய்வாளர்கள், துணை உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 98 பேர் அதிரடியாக இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை புதுச்சேரி காவல்துறை தலைவர் ஷாலினி சிங் பிறப்பித்துள்ளார். மேலும் இது சம்பந்தமாக நகல் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.

News October 9, 2024

புதுச்சேரி பிரஞ்சு தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் மெயில் மூலம் நேற்று முன்பு வெடிகுண்டு மிரட்டல் வந்தது அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இன்று புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக வெளியான தகவலை அடுத்து அங்கு அதிகாரிகள் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

News October 9, 2024

குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பு

image

புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் 1, உறுப்பினர்கள் 6 என கவுரவ அடிப்படையில் 7 பதவிகள் ன் நிரப்பப்பட உள்ளது. பதவிக்கு புதுவையை பூர்வீகமாக கொண்டவர்களிடம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. நவம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என இயக்குனர் முத்துமீனா நேற்று தெரிவித்துள்ளார்.

News October 9, 2024

கணவர் வீட்டை சூறையாடிய மனைவி

image

லாஸ்பேட்டை கருவடிக் குப்பம் பகுதியை சேர்ந்தவர் அப்துர் ரகுமான். அவரது மனைவி ஹசினா பேகம். இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஹசினாபேகம் மற்றும் அவரது தாய் உட்பட 5 பேர் , அப்துர் ரகுமான் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டில் புகுந்து அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். போலீசார் நேற்று ஹசினா பேகம், அவரது தாய் உட்பட 5 பேர் மீது, வழக்குபதிந்தனர்.

News October 8, 2024

பாராமெடிக்கல் படிப்பு: 10ஆம் தேதி இறுதி

image

புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் பாராமெடிக்கலில் உள்ள அரசு படிப்புகளில் ஒதுக்கீடு, பிற மாநிலத்தினர் என்.ஆர்.ஐ. உள்ள ஒதுக்கீடு இடங்களுக்கு ஆன்லைன் மாப் அப் சுற்று சீட் ஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் சீட் ஓதுக்கீடு உத்தரவை பதிவிறக்கம் செய்து வரும் 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் சேரலாம். ஷேர் செய்யவும்

News October 8, 2024

தீபாவளி பரிசாக விவசாய கடன் தள்ளுபடி

image

தொண்டமாநத்தம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். அப்போது பேசிய முதலமைச்சர் தீபாவளி பரிசாக விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தார். ஷேர் செய்யவும்

News October 8, 2024

புதுச்சேரி: ரேஷன் கடைகளில் இலவச சக்கரை, அரிசி

image

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கும் பணி கடந்த 7 ஆண்டிற்கு முன்பு நிறுத்தப்பட்டது. தீபாவளிக்கு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இந்த நிலையில் ரேஷன் கடைகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ரேஷன் கடை ஊழியர்கள் கடைகளை சுத்தம் செய்து மிஷின்களை நேற்று தயார் செய்தனர்.

News October 8, 2024

வில்லியனூரில் ரயில் மோதி முதியவர் பலி

image

வில்லியனூர் வீ. தட்டாஞ்சாவடி ரயில்வே தண்டவாளம் பகுதியில் ரயில் மோதியதில் முதியவர் பலியாகியுள்ளார். இதனை அறிந்த பொதுமக்கள் வில்லியனூர் காவல் நிலையத்திற்கு, ரயில் நிலைய காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் மற்றும் வில்லியனூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.