Pondicherry

News July 17, 2024

போதை பொருள் ஒழிப்பு குறித்து ஆலோசனை

image

காரைக்கால் மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்தான ஆலோசனைக் கூட்டம் இன்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிகளுக்கு அருகில் 100 மீட்டர் இடைவெளியில் போதை மற்றும் புகையிலை பொருட்கள் விற்பதை தடை செய்து முற்றிலும் கண்காணிப்பது என்று ஆலோசிக்கப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News July 16, 2024

பி.ஆர்க். படிப்புக்கு முதல் சுற்று சீட் ஒதுக்கீடு

image

புதுவை மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் பிஆர்க் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு இறுதி தரவரிசை பட்டியலுடன் முதல் சுற்று வரைவு சீட் ஒதுக்கீடு பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. நாளை 17ம் தேதி காலை 10 மணி முதல் 22ம் தேதி மாலை 5 மணிக்குள் அசல் சான்றிதழ்கள், கல்வி கட்டண சேர்க்கை ஆணையுடன் கல்லூரியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 16, 2024

கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை

image

புதுச்சேரி மாநில உயர்கல்வி துறை சம்பந்தமான வளர்ச்சி பணிகள் குறித்து புதுச்சேரி மாநில கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் ,உயர்கல்வித்துறை இயக்குனர் அமன் சர்மா, தொழில் நுட்ப பல்கலைக்கழகம் துணை வேந்தர், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர் அலுவலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

News July 16, 2024

என்.ஐ.டி கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

image

புதுச்சேரி காவல்துறையினரின் தொழில்முறை தரம் மற்றும் திறனை மேம்படுத்தும் முயற்சியில்,புதுச்சேரி காவல்துறை காரைக்கால் என்.ஐ.டி-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி இன்று 100அடி சாலையில் நடைபெற்றது. புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் காரைக்கால் என்.ஐ.டி இயக்குநர் காங்ரேகர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திட்டு, பரிமாற்றம் செய்து கொண்டார்

News July 16, 2024

புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

image

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ‘மொஹரம்’ நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க அமைச்சர்கள் & சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நாளை(17.07.24) புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி மாநில பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

News July 16, 2024

கலை விழா நடத்துவது குறித்து முதல்வர் ஆலோசனை

image

புதுச்சேரி அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படும் கலை விழாவை இந்த ஆண்டும் சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சபாநாயகர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அரசு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News July 16, 2024

நீதி விசாரணை வேண்டும்- அன்பழகன்

image

புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பெருவதற்காக அடிப்படை ஆதாரமாக இருக்கக்கூடிய சிவில் சப்ளை துறையில் கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற முறைகேடுகள் சம்பந்தமாக முதல்வர் மற்றும் ஆளுநர் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் தற்போது சிவில் சப்ளை துறை மூலம் நிறுத்தி வைத்துள்ள நியாயமான பணிகளை தொடர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

News July 16, 2024

புதுச்சேரியில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று(ஜூலை 16) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரவித்துள்ளது. அதன்படி, புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு(7 மணி வரை) மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. கடந்த 4 நாட்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News July 16, 2024

புதுவை சபாநாயகர் துவக்கி வைப்பு

image

நெட்டப்பாக்கம் கொம்யூன் பண்டசோழநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ரூபாய் 118.00 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சுற்றுச்சுவர் அமைத்து, செம்மண் நிரப்பி விளையாட்டுத் திடல் அமைப்பதற்காக பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் துணை சபாநாயகரும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ராஜவேலு கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

News July 16, 2024

புதுச்சேரி சட்டப்பேரவை துணைத் தலைவர் வழங்கல்

image

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக நெட்டப்பாக்கம் தொகுதி உள்ள ஆதிதிராவிட ஏழை பெண்மணிகளுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் 23 நபருக்கு 1 நபருக்கு தல 1 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 23 லட்சம் ரூபாய் சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு வழங்கினார். இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

error: Content is protected !!