Pondicherry

News October 14, 2024

புதுச்சேரி, காரைக்காலில் நாளை விடுமுறை

image

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடல் உருவாகும் வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து புதுச்சேரி, காரைக்கால் பகுதிக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 14, 2024

புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை

image

வங்கக் கடல் மற்றும் அதையொட்டி பகுதியில் அடுத்தடுத்து உருவாகும் வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, புதுச்சேரியில் அக்.15-ஆம் தேதி கனமழை எச்சரிக்கையும், அக்.16-ஆம் தேதி அதி கனமழை எச்சரிக்கையும் (ரெட் அலெர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 40-55 கி.மீ வரை பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2024

புதுச்சேரி பொறியாளர் தேர்வு தேதி அறிவிப்பு

image

புதுச்சேரி அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டு துறையின் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும். ஷேர் செய்யவும்

News October 14, 2024

புதுவை அரசு கல்லூரி மாணவர் சாதனை

image

காமன்வெல்த் பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்றது. இதன் சிறப்பு பிரிவில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான வீரர் – வீராங்கணைகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட மதகடிப்பட்டு காமராஜர் அரசு கலைக்கல்லூரி மாணவர் விஷால் 370 கிலோ எடையை தூக்கி தங்க பதக்கம் வென்றார். SHARE AND COMMENT IT

News October 14, 2024

புதுச்சேரியில் ரூ.700 கோடியில் ஈரடுக்கு மேம்பாலம்

image

புதுவையில் போக்குவரத்து பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் இந்திரா காந்தி சிலை சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் வரையில் சுமாா் ரூ.700 கோடியில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நீண்டகால கோரிக்கைக்கு தற்போது மத்திய அரசின் சாலை போக்குவரத்து துறை சம்மதித்துள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.

News October 14, 2024

புதுச்சேரி மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அக்.14 மற்றும் 15ஆம் தேதிகளில் கடலோரப்பகுதிகளில் காற்று அதிகமாக வீசும் பகுதிகளுக்கு செல்லாமல் மிகவும் பாதுகாப்பாக மீன்பிடிப்பில் ஈடுபடுமாறும், மேலும் அக்.16 & 17ஆம் தேதிகளில் புதுச்சேரி கடல் பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபடக்கூடாது என்றும், மேலும் வானிலை முன் எச்சரிக்கை செய்திகளை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

News October 13, 2024

புதுவை மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

image

தீபாவளி பண்டிகை வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக புதுவை மக்கள் இணையதளம் வழியாக தள்ளுபடி விலையில் பட்டாசுகளை வாங்குவதற்கு ஆர்வம் செலுத்துகின்றனர். இதனை பயன்படுத்தி மோசடி கும்பல் பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுகிறது. இணையவழியில் பட்டாசுகள் வாங்குவதற்கு பொதுமக்கள் பணம் செலுத்த வேண்டாம் என்று இணையவழி குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News October 13, 2024

புதுவையில் 7 பேரிடம் மர்ம நபர்கள் மோசடி

image

புதுவை மாநிலத்தில் இதுவரை மண்ணாடிப்பட்டு சதிஷ்குமாரிடம் ரூ.1 லட்சமும், ஆருத்ரா நகர், ரமேஷிடம் ரூ.7,763, பால் என்பவரிடம் ரூ.22,670, வில்லியனூர் தேவதாசிடம் ரூ.9,901, காரைக்கால் மணிகண்டனனிடம் ரூ.1 லட்சம், இந்துஜாவிடம் ரூ.40 ஆயிரம் என 7 பேரிடம் பல்வேறு பொய்யான காரணங்களை கூறி 3 லட்சம் வரை மர்ம நபர்கள் மோசடி செய்து உள்ளனர். இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து மேற்கொண்டுள்ளனர்.

News October 11, 2024

காரைக்கால் துணை ஆட்சியர் கைது

image

காரைக்காலில் உள்ள புகழ் பெற்ற பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில் நான்கு பேர் கைது செய்து விசாரணை செய்து வரும் நிலையில் நேற்று மாலை மகளிர் காவல் நிலையத்தில் உள்ள ரகசிய அறையில் காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சனை வைத்து காரைக்கால் போலீசார் 15 மணி நேரம் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று அவரை கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

News October 11, 2024

காரைக்கால் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கை ஏற்பு – மாவட்ட ஆட்சியர்

image

மாவட்ட ஆட்சியரின் அழைப்பின் பேரில் அங்கன்வாடி சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர்.
மாவட்ட ஆட்சியர், சம்பள பில் மற்றும் காய்கறி பில்களை காலத்தோடு செய்ய அந்த துறைக்கு அமைச்சக ஊழியர் நியமிக்கப்படுவார், முதியோர்கள் ஆதார் அட்டை பெற திருத்தம் செய்ய கிராமந்தோறும் சிறப்பு முகாம் அமைக்கப்படும் மற்ற கோரிக்கைகளை அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்தார்.