India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி, மூலக்குளம், வில்லியனுார் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சாந்தா அவரது வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் நகை மாயமாகி இருந்தது.போலீசார் எழிலரசனை கைது செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன், குற்றம் சாட்டப்பட்ட எழிலரசனுக்கு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
புதுவை சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ”விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சை பெற மத்திய அரசு ஒரு திட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.1.5 லட்சம் நிதியும், ஒரு வாரம் சிகிச்சையும் அளிக்கப்படும். மருத்துவமனையில் உள்நோயாளிகளாக கட்டணம் இல்லாமல் சிகிச்சை பெறளலாம். இத்திட்டத்தை புதுச்சேரியில் வியாழக்கிழமை தொடங்கியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
புதுவை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏ பி.ரமேஷ், கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் மீண்டும் நடைமுறைக்கு வருமா? எனக் கேட்டிருந்தார். இதற்கு முதல்வர் என்.ரங்கசாமி, சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டு, நலிவடைந்து, செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மீண்டும் அதை செயல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது என்றார்.
சட்டப் பேரவையில் நேற்று பூஜ்ய நேரத்தில் பேசிய முதலியார் பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. சம்பத், “18 வயதுக்கு உட்பட்டோரை பார்களில் அனுமதிக்கக்கூடாது. புதுச்சேரியில் மதுபார்களுக்குள் அனுமதிக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. சிறுவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். 18 வயதுக்கு உட்பட்டோரை மதுபார்களுக்குள் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
மகளிருக்கு அறிவிக்கப்பட்ட ரூ.1,000 உதவித்தொகை கேட்டு புதுச்சேரி மகளிர் மேம்பாட்டு துறை அலுவலகத்தில் பெண்கள் குவிந்தனர். அவர்களிடம், இதுவரை அரசிடம் இருந்து எந்த ஆணையும் வரவில்லை. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய பின்பே உதவித்தொகை வழங்கும் பணி பயன்பாட்டுக்கு வரும். இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பெண்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.
புதுச்சேரி சிவப்பு மற்றும் மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு நிறுத்தப்பட்ட கேஸ் மானியம் மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் திருமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அடுத்த மாதத்தில் இருந்து அனைத்து சிவப்பு மற்றும் மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரி முழுவதும் பாதாள சாக்கடை மற்றும் கழிவு நீர் தொட்டிகளை மனிதர்கள் இன்றி நவீன இயந்திரம் மூலம் சுத்தம் செய்ய நடவடிக்கை. நகர பகுதியில் Smart city திட்டத்தின் கீழ் 50 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யப்படுகிறது. இது முழு வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரி முழுவதும் 140 கோடி ரூபாய் செலவில் இதே முறையில் சுத்தம் செய்ய நடவடிக்கை என அமைச்சர் லட்சுமி நாராயணன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
புதுவையில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகையில், ”புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஏழைகளுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும். மேலும் விரிவான குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். அதுவரை இந்த இலவச 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
காரைக்கால் தலத்தெருவைச் சேர்ந்த ரூபன், கடன் செயலி மூலம் ரூ.1,800 கடன் பெற்று அந்த பணத்தை திருப்பி செலுத்திய பிறகும் அவரது படத்தை ஆபாசமாக சித்தரித்து அவருக்கு அனுப்பி வைத்து மேலும் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரூபன் ரூ.10000 அனுப்பியுள்ளார். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டவே, ரூபன் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்
மத்திய அரசின் திட்டமான சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான கட்டணம் இல்லா சிகிச்சை திட்டம் தொடக்க விழா மற்றும் பயிற்சி முகாம் புதுச்சேரி காவல்துறை சார்பில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.