India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், “அலுவல் ஆய்வு குழு கூட்டத்தின் படி, நாளை 1-ஆம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதமும்,
2-ஆம் தேதி பட்ஜெட்டை முதல்வர் தாக்கல் செய்வார் என்றும் தெரிவித்தார். மேலும், 5,6-ஆம் தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம், 7,8,9-ஆம் தேதிகளில் துறைகள் மீது உறுப்பினர்கள் பேசுவார்கள் அதற்கு, 12,13-ஆம் தேதிகளில் அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் என்றார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், இந்த அவசர
அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், அமைச்சர்கள் அரசு செயலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று புதுவையில் செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் அரசு நிர்வாகம் எந்த இலக்கை நோக்கி செயல்படப்போகிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கும் உரையாக இல்லை என்று ஆளுநர் உரையை விமர்சனம் செய்தார். மேலும் ஆளுநர் உரையில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனி நபர் வருமானம் குறிப்பிட்டு பல தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகித்த வந்து சி . பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டு இன்று புதுச்சேரியில் இருந்து விடைபெற்றார். இந்நிலையில், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார், வி பி ராமலிங்கம் ஆகியோருடன் ஆளுநர் மாளிகைக்கு சென்று வழி அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் அமைச்சராக பதவியேற்ற திருமுருகனுக்கு இன்று குடிமைப்பொருள் வழங்கல் துறை மற்றும் போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமாரின் இலாகா மாற்றப்பட்டு அவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தீயணைப்பு துறை ஒதுக்கீடு செய்து புதுச்சேரி மாநில சி.பி. ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.2.44 லட்சத்தில் இருந்து ரூ.2.63 லட்சமாக உயர்ந்துள்ளதாக புதுவை துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான ஆளுநர் உரையில் பேசிய அவர், புதுவையில் 7.61% தனிநபர் ஆண்டு வருமானம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள 1,119 பதவிகள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று உரையாற்றிய துணை ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன், இது எனது முதலும் கடைசியுமான உரை என்றார். மேலும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் புதுச்சேரியில் அமைதியாக நடந்து முடிந்தது என்றும், அனைத்து துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். மற்றும் மூன்றாவது முறையாக பாரத பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்களை பேரவையில் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று கவர்னர் உரையுடன் பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. இதற்கு வருகை தந்த உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், புதுச்சேரி சட்டப்பேரவை அரசாங்க உறுதிமொழி குழு தலைவருமான நேரு(எ)குப்புசாமி கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட கவர்னர் உரையுடன் வந்தார். அந்த உரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர்.
காரைக்கால் தெற்கு தொகுதி எம்எல்ஏ திருமுருகனுக்கு சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு, அவருக்கு எந்த இலக்கவும் ஒதுக்கபடமல் இருந்தது. இந்நிலையில், அமைச்சருக்கு இலாகா ஒதுக்குவதற்கு ஒப்புதல் வாங்குவதற்காக துணைநிலை ஆளுநருடன், முதல்வர் ரங்கசாமி இன்று சந்திப்பு நடைபெற்றது. அமைச்சர் திருமுருகனுக்கு போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி சட்டசபையில் துணை நிலை ஆளுநர் உரை நடைபெறும் போது காங்கிரஸ் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும், இந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்றும் உரையில் கூறுவது அனைத்தும் ஏமாற்று வேலை எனக் கூறி வெளிநடப்பு செய்தனர்.
Sorry, no posts matched your criteria.