India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி, காரைக்காலில் 250 இடங்கள் உள்ளன. இதில் 64 இடங்கள் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இரட்டை குடியுரிமை பெற்று பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 9 பேர் இடம் பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக ஆளுநர் கைலாஷ்நாதன் மத்திய அரசை தொடர்பு கொண்டு மாணவர்களை நீக்க நடவடிக்கை எடுத்தார்.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இன்று மாஹி வந்து சேர்ந்த துணைநிலை ஆளுநர் கைலஷ்நாதனுக்கு மாஹே மண்டல நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் காவலர் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. சட்டப்பேரவை தலைவர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரம்பத், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு கவர்னரை வரவேற்றனர்.
மத்திய அரசின் உயர்கல்வி தரவரிசை பட்டியலில், நாட்டின் 100 சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் ஜிப்மரைத் தவிர்த்து இதர புதுச்சேரி அரசு கல்வி நிறுவனங்கள் ஏதும் இடம் பெறவில்லை. இதில் புதுச்சேரி காலாபெட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 13வது இடத்தில் இருந்த மத்திய பல்கலைக்கழகம், தற்போது 100வது இடத்துக்கு வெளியே சென்றுள்ளது.
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா 2024க்கான நாடாளுமன்ற குழு உறுப்பினர் முகமது ஜவாத் எம்.பி.யை, காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் நேற்று தனியார் ஹோட்டலில் சந்தித்து பேசினார். அப்போது புதுச்சேரி அனைத்து மஸ்ஜித் நிர்வாகிகளின் கருத்துக்களை மனுவாக சமர்ப்பித்து, புதுச்சேரி இஸ்லாமிய மக்களின் குறைகளை நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் எடுத்துரைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் ரமேஷ் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இயற்கையான மூலப்பொருட்களான களிமண் மற்றும் மண் போன்றவற்றால் செய்ய வேண்டும். மேலும் விநாயகர் சிலைகளை உருவாக்க நச்சு மற்றும் எளிதில் மக்காத ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணப்பூச்சுக்கள் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, சென்டாக் முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கான 3ஆம் கட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி வெங்கடேஸ்வரா உள்ளிட்ட கல்லூரிகளில் மொத்தம் 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் அழகானந்தன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேட்டுப்பாளையம், வம்பாகீரப்பாளையம், வில்லியனூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகியவற்றில் நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது வரும் செப்.30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் மாணவர்களுக்கு இலவச சீருடை, மதிய உணவு, மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை ஆகியவை வழங்கப்படும்.
நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில் புதுவையில் திரைப்படம் 15 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. இதற்காக நாளை முதல் வரும் எட்டாம் தேதி வரை சிறப்பு காட்சிக்கு மாவட்ட நிர்வாகம் இன்று அனுமதி வழங்கி உள்ளது. இந்த நாட்கள் மட்டும் கூடுதலாக ஒரு காட்சி என ஐந்து காட்சிகள் புதுவையில் திரையிடப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.