India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவில் ஆட்டிசம் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களை கருப்பொருளாக வைத்து, இயக்குநர் நரேஷ்குமார், நித்யபிரியா தயாரித்துள்ள, திரைப்படம் புதுச்சேரி தியேட்டரில் நேற்று திரையிடப்பட்டது. இதனை முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் பார்க்கும்போது, முதல்வர் ரங்கசாமி உணர்ச்சி வசப்பட்டு, கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரை துடைத்துக் கொண்டார். இது பார்ப்பவர்களை உணர்ச்சி வசப்படுத்தியது.
புதுவை, காரைக்கால் மீனவர்கள் நாளை இரவு வரை கடலில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசும் என்பதால் கடலுக்குச் செல்லத் தடை விதித்து மீன்வளத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்ற 60 மீனவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை புதுவை மீன்வளத் துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கடந்த ஆண்டு ஆன்லைனில் பட்டாசு ஆர்டர் செய்து 78 க்கும் மேற்பட்ட நபர்கள் இணைய வழி மோசடி காரர்களால் ஏமாற்றப்பட்டனர். அதே போல் கடந்த 3 நாட்களில் 2 புகார்கள் பெறப்பட்டு 45 ஆயிரம் ரூபாய் பணத்தை பொதுமக்கள் இழந்துள்ளனர். ஆகவே பொதுமக்கள் ஆன்லைனில் பட்டாசு ஆர்டர் செய்து பணத்தை இழக்க வேண்டாம் என புதுச்சேரி இணைய வழி காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் இஸ்மாயில் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் எவரும் இன்று முதல் 18 ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீறி கடலுக்கு சென்றால் அரசு மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் நிறுத்தப்படும்.
அரியாங்குப்பதில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய வாழ்வாதார சேவை மைய வளாகத்தில் புதுச்சேரி தனியார் நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் 17 தேதி நாளை காலை 10 முதல் 1 வரை நடைபெற உள்ளது. இதில் கல்விச்சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ், சுய விவரம் மற்றும் இதர சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.
புதுச்சேரி மின்துறை பேரிடர் காலத்தில் ஏற்படும் ஒரு அசாதாரண சூழ்நிலையில் எதிர்கொள்ளவும், மழை காலங்களில் ஏற்படும் மின்தடையை உடனுக்குடன் அறியும் பொருட்டு ஒரு அவசரகால கட்டுப்பாட்டு அறை மின்துறை தலைமை அலுவலகத்தில் முழு நேரமும் இயங்கி வருகிறது. இதனை பொதுமக்கள் 0413-2339532 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது 18004251912 மற்றும் 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலமாக மின் துறைக்கு தெரியப்படுத்தலாம்.
காரைக்கால் பார்வதி ஈஸ்வரர் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக துணை கலெக்டர் ஜான்சனை கடந்த பத்தாம் தேதி காரைக்கால் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி தொடர்பாக முதல் கட்ட அறிக்கையை கலெக்டர் மணிகண்டன் அரசுக்கு அளித்தார். இந்த நிலையில் துணை கலெக்டர் ஜான்சனை பணி இடை நீக்கம் செய்து துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் நேற்று உத்தரவிட்டார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதி நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து உள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காரைக்காலில் உள்ள பார்வதீஸ்வரர் கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த நிலமோசடி விவகாரத்தில் புதுச்சேரி மாநிலத்திற்கு பெரும் கலங்கத்தை ஏற்படுத்தி இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை துணைநிலை ஆளுநர் கூர்ந்து கவனித்து வருவதுடன், விசாரணையில் எந்தவித தவறும் நடக்காமல் இருக்கும்படி ஆட்சியருக்கு அறிவுறுத்தி உள்ளார் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் செயலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் கடந்த இரண்டு தினங்களாக மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனை எடுத்து புதுச்சேரி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டது.
Sorry, no posts matched your criteria.