India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரஞ்சன்குடிகோட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அழகிய கோட்டையாகும். இது பெரம்பலூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோட்டையை ரஞ்சன்குடி கோட்டை என்றும் நஞ்சன்குடி கோட்டை என்றும் குறிப்பிடலாம். 1751ஆம் ஆண்டு நடைபெற்ற வாலிகொண்டா போரின் பிரதிபலிப்பு காட்சியாக இந்த கோட்டை அமைந்துள்ளது. இது நம்ம பெரம்பலூருக்கு ஒரு அடையாளமாக திகழ்கிறது. ஷேர் செய்யவும்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் மகளிர் விடுதிகள், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விடுதிகள் அனைத்தும் அரசின் சட்ட விதிமுறைகளின்படி, பதிவு செய்து செயல்பட வேண்டும், இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். SHAREIT
தமிழ்நாடு முதலமைச்சர் நவம்பர் மாதத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்துகொள்ள வருகை தர உள்ளதால், நிகழ்ச்சி நடைபெற உள்ள இடம் மற்றும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் இன்று (29.10.2024) ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருவதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறை- 2025 வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (அக்.29) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டார்.
செங்கல்பட்டில் இருந்து சிவகாசிக்கு பட்டாசு வாங்க சென்ற நபரை வழிமறித்து ரூ.10 லட்சம் வழிப்பறி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் திருநங்கையுடன் உல்லாசமாக இருந்த போது மர்ம நபர்கள் மிரட்டி பணம் பறித்துள்ளனர். இதையடுத்து போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட சந்துரு (எ) பாபு, அப்துல் ஹமீது ஆகியோரை கைது செய்து சிறையில் அடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (28.10.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பெற்றுக்கொண்டார். இந்த குறைதீர்நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஆலத்தூர் ஒன்றியம், சாத்தனூர் கிராமத்தில் புகழ்பெற்ற தேசிய கல்மரப் பூங்கா உள்ளது. இது பெரம்பலூர் நகரத்திலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது. இது 1940ஆம் ஆண்டு புவியியலாளர் எம்.எஸ்.கிருஷ்ணனால் கண்டுபிடிக்கப்பட்டது. 120 மில்லியன் ஆண்டு பழங்கால மரம் கல்லாக மாறியிருக்கலாம் என நம்பப்படுகிறது. பெரம்பலூர் மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாக இது கருதப்படுகிறது. ஷேர் செய்யவும்
பெரம்பலூா், புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூா், கொளக்காநத்தம், பாடாலூா், சாத்தனூா், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூா், தெற்கு மாதவி, ஆலத்தூா் கேட், வரகுபாடி, நல்லூா் ஆகிய பகுதிகளில் இன்று (28.10.24) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
பாடாலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், இரூர், வரகுபாடி, ஆலத்தூர்கேட், தெரணி பாளையம், நல்லூர் திருவளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு நடைபெற்றது. அச்சமயம் தேர்வு மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது துணை ஆட்சியர் கோகுல் மற்றும் துறை சார் அதிகாரிகளும் உடனிருந்து செயல்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.