India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் கல்யாண நகர் பகுதியில் ஹேமலதா மற்றும் அவரது மகள் அபிநயா இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 2 மணி அளவில் முகமூடி அணிந்து வந்த நபர்கள் ஹேமலதாவின் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து ஹேமலதா, அபிநயாவையும் கை கால்களை கட்டி போட்டு அவர்கள் அணிந்திருந்த 5 பவுன் செயின், ரூ.2 லட்ச ரொக்கப் பணத்தையும் எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி திருநாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 32 கடைகளில் மது விற்பனை இரண்டு கோடியே 17 லட்சத்தி 74 ஆயிரத்து 336 ரூபாயாக விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கடைகள் குறைந்த நிலையிலும் விற்பனை அதிகமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சொந்த ஊர் சென்றோர் எளிதாக சென்னை ள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 2000திற்கும்மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஷேர் செய்யவும்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நாளான இன்று 28 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (அக்.31) இரவு 7 மணி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் போது கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் நேற்று சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் நேரடியாக மனுவை பெற்றார். இம்முகாமில் 13 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
➤எளிதில் தீப்பற்றும் ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது
➤கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம்தானே என வீட்டுக்குள் வெடிக்கக் கூடாது
➤ வெடிகளை வெடிப்பதற்கு நீண்ட கைப்பிடி கொண்ட ஊதுவத்திகளைப் பயன்படுத்த வேண்டும்
➤ வாளியில் தண்ணீரை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்
➤ தீக்காயம் ஏற்பட்டால் சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும். SHAREIT
பெரம்பலூர் மாவட்டம் கல்யாண் நகரில் வசித்து வரும் ஹேமலதா, அவரது மகள் அபிநயா என்பவரது வீட்டில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து தாய் மகள் இருவரையும் கை கால் களைகட்டி வைத்து வீட்டில் இருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார். சம்பவம் குறித்து ஹேமலதா பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தீபாவளியான நாளை திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் போது கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்
ரஞ்சன்குடிகோட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அழகிய கோட்டையாகும். இது பெரம்பலூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோட்டையை ரஞ்சன்குடி கோட்டை என்றும் நஞ்சன்குடி கோட்டை என்றும் குறிப்பிடலாம். 1751ஆம் ஆண்டு நடைபெற்ற வாலிகொண்டா போரின் பிரதிபலிப்பு காட்சியாக இந்த கோட்டை அமைந்துள்ளது. இது நம்ம பெரம்பலூருக்கு ஒரு அடையாளமாக திகழ்கிறது. ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.