Perambalur

News May 24, 2024

பெரம்பலூரில் மழைக்கு வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (மே.24) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூரில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 24, 2024

குரூப்-IV தேர்வு குறித்த ஆய்வுக்கூட்டம்

image

ஜூன் -09 ஆம் தேதி நடைபெறவுள்ள TNPSC GROUP-IV தேர்வினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தமாக இத்தேர்வு 61-மையங்களில் நடைபெற உள்ளதால் போதுமான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டம் என ஆட்சியர் தெரிவித்தார்.

News May 24, 2024

மருத்துவகல்லூரி தவறான தகவல்

image

தமிழகத்தில் பெரம்பலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக இன்று காலை தகவல் வெளியானது. இந்நிலையில், அத்தகவல் தவறானது என தமிழ்நாடு மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

News May 24, 2024

பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி!

image

தென்காசியில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மேலும், மத்திய அரசின் பங்களிப்போடு அமையவுள்ள கல்லூரிகளுக்கு 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணுமாறு, மே 6 ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட 9 அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

News May 24, 2024

சாகச விருதிற்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், மாநிலங்களில் நிலம், கடல் மற்றும் ஆகாயத்தில் பாராட்டத்தக்க வகையில் சிறப்பான சாதனை படைத்தவர்களை பாராட்டும் வகையில் டென்சிங் நார்கே தேசிய சாகச விருது வழங்கப்படுகிறது. அதன்படி 2023 ஆம் ஆண்டிற்கான இவ்விருதிற்கு விண்ணபிக்க தேவையான விபரங்களை https://awards.gov.in/ என்ற இணையத்தில் பார்க்குமாறு ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்

News May 23, 2024

சாகச விருதிற்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், மாநிலங்களில் நிலம், கடல் மற்றும் ஆகாயத்தில் பாராட்டத்தக்க வகையில் சிறப்பான சாதனை படைத்தவர்களை பாராட்டும் வகையில் டென்சிங் நார்கே தேசிய சாகச விருது வழங்கப்படுகிறது. அதன்படி 2023 ஆம் ஆண்டிற்கான இவ்விருதிற்கு விண்ணபிக்க தேவையான விபரங்களை https://awards.gov.in/ என்ற இணையத்தில் பார்க்குமாறு ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்

News May 23, 2024

பெரம்பலூர் பகுதிகளில் நெற்பயிர்கள் சேதம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு வார காலமாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காற்றுடன் பெய்த கன மழையினால் நொச்சியம் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் அளவிலான நெற்கதிர்கள் சாய்ந்து முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இதனால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

News May 23, 2024

தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்த கலெக்டர்

image

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள், அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமணன், செயல் அலுவலர் அசனாம்பிகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News May 23, 2024

லாரி மோதி விபத்து: ஒருவர் பலி

image

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த, வேப்பந்தட்டை தாலுகா பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பிள்ளை மகன் செளந்தரசீலன் என்பவரை எதிரே வந்த லாரி மோதியதில் உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் துறையூர் பாலகிருஷ்ணம்பட்டி, பூபதி (வயது-53) என்பது போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

News May 23, 2024

தேர் திருவிழா கோலாகலமாக கொண்டாட்டம்

image

ஆலத்தூர், பாடாலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் மற்றும் அய்யனார் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலின் திருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டுதலுடன் தேர் திருவிழா விழா தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் செல்லியம்மன், அய்யனார் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.