India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி மற்றும் நெகிழி கழிவு மேலாண்மையை திறம்பட செயல்படுத்துதல் தொடர்பாக, வணிக உரிமையாளர்கள் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவன பிரதிநிதிகளுக்கான பயிலரங்கம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு தனலட்சுமி சீனிவாசன் ஹோட்டலில் நடைபெற உள்ளதென மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பாக, பொதுமக்கள் கோடை காலத்தில் எவையெல்லாம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும், டீ, காபி, ஆல்கஹால் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்கவும் எனவும், மற்றும் வெற்றுக்காலுடன் வெயிலில் நடக்க வேண்டாம், . மேலும் முக்கியமாக குழந்தைகளை வாகனங்களில் தனியாக விட்டு செல்லாதீர்கள் என தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் சிருவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்தி வாய்ந்த தெய்வமான மதுரகாளியை திருமண வரம், குழந்தைப்பேறு வேண்டுவோர் அதிகமாக வந்து வழிபடுகின்றனர். மேலும், உடல் உபாதைகள், தொழில் சிக்கல் ஆகியவற்றுக்கும் அம்மன் தீர்வை அருள்வதாக ஐதீகம். நேர்த்திக்கடனாக உடலில் வயிறு, நெஞ்சு, போன்ற இடங்களில் மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் கோடை காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் பருக வேண்டும், வெயிலில் செல்லும் போது பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், அடிக்கடி பழச்சாறுகளை பருகுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
NLC நிறுவனத்தில் Junior Overman & Mining Sirdar பணிகளுக்கு 171 காலிப் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். டிப்ளமோ,இன்ஜினியரிங் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Junior Overman பணிக்கு ஆண்டுக்கு ரூ. 8.53 லட்சமும், Mining Sirdar பணிக்கு ஆண்டுக்கு ரூ. 7.16 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.மேலும் அறிய <
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள காப்பீட்டு முகவர் (Insurance Agent) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள், இதர துறைகளுக்கு சொந்தமான நிலங்களில் மற்றும் பொது இடங்களில் உரிய அனுமதியின்றி நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை ஏப். 27-க்குள் அரசியல் கட்சியினர், சமூகம், மதம், சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் அகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியைச் சேர்ந்த முத்தையா (23) என்பவர் பெரம்பலூரில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்கல்வி பயின்று வந்துள்ளார். இவர் பூலாம்பாடியில் நடந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு காளைகளை அடக்கப் போவதாக வீட்டில் கூறியுள்ளார். இதற்கு அவரது தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த முத்தையா அவரது வயலுக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்னி வீரர்களின் பல்வேறு பிரிவுகளுக்கான ஆள்சேர்ப்புக்கான பதிவு ஏப்ரல் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி, , அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW.
சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள்<
Sorry, no posts matched your criteria.