Perambalur

News June 7, 2024

பெரம்பலூரில் திடீர் மழை

image

பெரம்பலூர் நகர்பகுதிகளான புதிய பேருந்து நிலையம், சங்குபேட்டை, நான்கு ரோடு, துறைமங்கலம், பழைய பேருந்து நிலையம், ஆலம்பாடி சாலை, துறையூர் சாலை, ஆத்தூர் சாலை, எளம்பலூர் சாலை, வடக்குமாதேவி சாலை மற்றும் அரணாரை ஆகிய பகுதிகளில் இன்று 7ஆம் தேதியான இரவு 8 மணிமுதல் பலமான காற்றுடன் கூடிய திடீர் மழை பெய்தது.

News June 7, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

தமிழக அரசு, துணிநூல் துறை மூலம் 10, 12ஆம் வகுப்பு முடித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக ஸ்பின்னிங் (ம) தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி பெறவிரும்புபவர்கள் https://tntextiles.tn.gov.in./jobs/ என்ற வலைதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News June 7, 2024

பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில்
5வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் ஜூன் 10 முதல் 21 நாட்கள் நடைபெறவுள்ளதால், விவசாயிகள் (ம) கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என கலெக்டர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.
கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய் வராமல் தடுத்திட தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

News June 7, 2024

பெரம்பலூர் குரூப்-IV தேர்வர்கள் வப

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஜூன் 9ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-4 தேர்வில், பெரம்பலூர் மாவட்டத்தில் 61 தேர்வு மையங்களில் 18,169 பேர் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வர்கள், தேர்வு எழுத ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 7, 2024

பெரம்பலூர்: முதல் பரிசு வென்று அசத்தல்!

image

திருச்சி மாவட்டம் பச்சைமலை நாகூர் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கபடி போட்டியில் அண்டை மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் அணிகள் பங்குபெற்றன. இதில் பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையத்தை சேர்ந்த சஹாரா அணியினர் பங்குபெற்று முதல் பரிசைப் பெற்றனர். முதல் பரிசை வென்ற அந்த அணியினருக்கு ஊர் பொதுமக்கள் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

News June 7, 2024

பெரம்பலூரில் திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆட்சியரகத்தில் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் அனைத்து திருநங்கையரும் பங்குபெற்று பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் நேற்று(ஜூன் 6)தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

பெரம்பலூர்: பாமாயில், து.பருப்பு பெற்றுக்கொள்ளலாம்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பாமாயில் மற்றும் துவரம்பருப்பு மே மாதத்தில் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை பெற்றுக்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் மாத பொருட்கள் வாங்கும்போது சேர்த்து பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் கற்பகம் நேற்று(ஜூன் 6) தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

பெரம்பலூர்: பயிர்களை தேர்வு செய்து பயன்பெற அறிவுறத்தல்

image

பெரம்பலூர் வேளாண் துறை இணை இயக்குநர் கீதா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது நிலத்தடி நீர் குறைவான இருக்கும் நிலையில் மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் கோடை காலத்திற்கு ஏற்ப பயிர்களை தேர்வு செய்து பயன்பெறலாம். நீர் இன்மையால் பயிர்களை கருதுவதை தடுக்க குறைவான நீர் தேவையுள்ள பயிர்களை பயிர் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

News June 6, 2024

“பெரம்பலூருக்கு மருத்துவக் கல்லூரி வருவது உறுதி”

image

பெரம்பலூரில் அருண் நேரு வெற்றி பெற்றதை அடுத்து (ஜூன் 5) நேற்று நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் K.N. நேரு, திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தார். மேலும், “பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி வருவது உறுதியாகிவிட்டது. இடம் பார்த்து தேர்வு செய்தவுடன் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். ரயில் போக்குவரத்து மற்ற திட்டங்களும் விரைவில் நிறைவேற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.

News June 6, 2024

நீட் தேர்வில் பெரம்பலூர் மாணவர்கள் சாதனை

image

பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளனர். கடந்த ஜூன் 4 அன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அப்பள்ளி மாணவர் முகுந்தன் 635 மதிப்பெண்களும்ம், மாணவி நவீனா 566 மதிப்பெண்களும் பெற்றும் சாதனைப் படைத்துள்ளனர். இதையடுத்து கல்வி குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான வரதராஜன் உட்பட தாளாளர், ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் வாழத்துகளை தெரிவித்து வருகின்றனர்.