Perambalur

News November 6, 2024

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அத்தியூர் (ம) பெரியவெண்மணி கிராமத்தில் உள்ள நியாய விலை கடை கட்டிடத்தினை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் இன்று  திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து துங்கபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டி நிறுத்துமிடம் கழிவறை கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 5, 2024

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு போலீசார் விசாரணை

image

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை ராஷினிநகரை சேர்ந்த சாதிக் பாட்ஷா இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சர்மிளா 3 பிள்ளைகளுடன் வீட்டில் வசித்து வருகிறார்.  வீட்டை பூட்டிவிட்டு விருத்தாசலத்திற்கு சென்று விட்டு இன்று காலை வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 81/2 பவுனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 5, 2024

பெரம்பலூர் எம்எல்ஏ கோரிக்கை

image

பெரம்பலூர் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்ரமணியன் இடம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி கண்டிப்பாக வேண்டும் என்று பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். கோரிக்கை ஏற்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

News November 5, 2024

அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு

image

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காரை ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவம்பர் 5-ஆம் தேதியான இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அடிப்படை வசதிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

News November 5, 2024

பெரம்பலூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

image

வேப்பந்தட்டை அருகே உள்ள நெய்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் அம்மாசி. இவரது மகன் ஊமைத்துரை இன்று வயலில் உள்ள மின்சார பெட்டியில் உள்ள சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்த வ.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 5, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக, தகவல் தெரிவித்தல் மற்றும் வழக்கு பதிவு செய்தல் தொடர்பான முறையீடுகளை 18002021989 (அ)14566 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி வாயிலாக புகார்களை அனைத்து வேலை நாட்களிலும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News November 4, 2024

பெரம்பலூர்: மக்கள் குறைதீர்க்கும் நாள் 

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே கலெக்டர் வந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 231 மனுக்கள் பெறப்பட்டன. 

News November 4, 2024

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட தலைவர்கள் அறிமுகம்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திற்குரிய மாவட்டத் தலைவர்களை அறிமுகம் செய்தார். அதே போல் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாவட்ட தலைவராக சிவா என்பவரை அறிமுகம் செய்தார். மாவட்ட தலைவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

News November 4, 2024

கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சடலமாக மீட்பு

image

சத்தரமனை கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் கடந்த 10 வருடங்களாக செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவில் (ம) அருகே உள்ள மண்டபத்தில் தங்கி வசித்து வந்தார். இவர் நேற்று வழக்கம் போல அதே பகுதியில் உள்ள சேகர் என்பவரின் விவசாய கிணற்றுக்கு குளிக்க சென்றவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்தார். தகவறிந்த போலீசார் மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

News November 4, 2024

குன்னம் பகுதியில் இடி தாக்கி மாடு பலி

image

குன்னம் பகுதி சின்னவெண்மணி கிராமத்தில் நேற்று கனமழை பெய்தது. அச்சமயம் சரோஜா என்பவருடைய பசுமாடு இடி மின்னல் தாக்கி உயிரிழந்தது. எட்டு ஆண்டு நிறைவடைந்த பசுமாடு எனவும் 30 ஆயிரம் மதிப்புமிக்க மாடு எனவும் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த பசுமாட்டை கிராமத்தின் மக்கள் மிகுந்த சோகத்துடன் பார்த்துச் சென்றனர்.

error: Content is protected !!